HomeCinemaராகவா லாரன்ஸ், கே.பி.ஒய். பாலா இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 15...

ராகவா லாரன்ஸ், கே.பி.ஒய். பாலா இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி செய்து கொடுத்தனர்!

Published on

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் பல வருடங்களாக மக்கள் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதே போல சமீபமாக பல சமூகப் பணிகளைச் செய்து வருகிறார் சின்னத்திரை  நடிகர் கே பி ஒய் பாலா. இருவரும் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக, 15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவியுள்ளனர்.

பாலா தான் செய்து வரும் தொடர் உதவிகளால் மக்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். பொது மக்களிடமிருந்து அவருக்கு பல கோரிக்கைகளும் குவிந்து வருகின்றது.

இந்த நிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளியில், பல காலமாக மாணவர்கள் கழிப்பறை வசதி இன்றி அவதிப்படுவதாகவும், அதை நிறைவேற்றி தர வேண்டுமென்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

KPY பாலா இந்த கழிப்பறை வசதியை மேம்படுத்த உடனடியாக 5 லட்சம் முன்பணம் அளித்தார், மேலும் இந்த கழிப்பறை வசதியை தன்னால் முழுமையாக செய்து தர முடியாதென்பதால், நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை அணுகியுள்ளார். உடனடியாக உதவ வந்த ராகவா லாரன்ஸ் மாஸ்டர், பாலாவை பாராட்டியதுடன், வெகு உற்சாகமாக உதவிப்பணிகளை தானும் இணைந்து செய்து தருகிறேன் என வாக்குறுதி அளித்தார்.

தற்போது பல காலமாக கிடப்பில் இருந்த பள்ளி மாணவர்களுக்கான கழிப்பறை வசதிக் கட்டிடத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் உற்சாகத்துடன் துவங்கியுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்களும், பள்ளி மாணவர்களும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலாவைப் பாராட்டி நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

Latest articles

இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் அழகிய லைலா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! 

ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'அழகிய லைலா.' இளைய திலகம்...

’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு...

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது!

ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு...

விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட்...

More like this