HomeGeneralசென்னை ரைபிள் கிளப் கவுரவ செயலாளராக தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் மீண்டும் தேர்வு!

சென்னை ரைபிள் கிளப் கவுரவ செயலாளராக தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் மீண்டும் தேர்வு!

Published on

சென்னை ரைபிள் கிளப் 1952 ஆம் ஆண்டு சென்னை மாநகரில் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், சுய உணர்வு ஆகியவற்றை உருவாக்கும் நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது.‌ எழும்பூர் மற்றும் அலமாதியில் இரண்டு துப்பாக்கி சுடும் வளாகங்களை கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் துப்பாக்கி சுடும் விளையாட்டின் வளர்ச்சிக்காக மறைந்த டாக்டர் பி. சிவந்தி ஆதித்தன் ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த துப்பாக்கி சுடும் வளாகங்களுக்கு அவரது பெயர் சூட்டப் பட்டிருக்கிறது.

மதிப்புமிக்க அர்ஜுனா விருதை வென்ற திருமதி. ரூப ஸ்ரீநாத் உன்னிகிருஷ்ணன் மற்றும் சமீபத்தில் ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற பிருத்விராஜ் தொண்டைமான் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக உள்ளளனர்‌.

இந்நிலையில் சென்னை ரைபிள் கிளப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொதுக் குழு கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள Police Officers Mess வளாகத்தில் நடைபெற்றது. நவம்பர் 4 ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் சங்க தலைவருமான திரு. சந்தீப் ராய் ரத்தோர்  ஐபிஎஸ் அவர்களும் மாநகர கூடுதல் காவல் ஆணையர் மற்றும் சங்க துணைத் தலைவருமான திரு. கபில்குமார் சி. சரத்கரி ஐபிஎஸ் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சென்னை ரைபிள் கிளப்பின் தலைவரான திரு சந்தீப் ராய் ரத்தோர், ”துப்பாக்கி சுடும் விளையாட்டின் வளர்ச்சிக்காக தனது ஆதரவு தொடரும்” என்று உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார். இதனை சங்க உறுப்பினர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர்.

மேலும் 2023 -26 காலகட்டத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கௌரவ செயலாளராக கே. ராஜ்சேகர் பாண்டியன், கௌரவ இணைச் செயலாளராக பாலாஜி தயாளன், கௌரவ பொருளாளராக எஸ். சிபி ராஜேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.‌

இதைத்தொடர்ந்து ஆர். சதீஷ்குமார், எஸ். கார்த்திக், மீரா ஜெகதீஷ், கே. முருகன், டாக்டர். பார்த்திபன் மனோகரன், ஆர். எம். அஸ்வின் குமார், டி.ஜே. ரஞ்சித் ஜெய்பிரபு, ஆர். வெங்கட்ராம், ப. கந்தவேல் ஆகிய ஒன்பது செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...