HomeCinemaமண் சார்ந்த உணர்ச்சிகரமான படைப்பாக பாரதி பாலகுமாரன் இயக்கும் படத்தில் இதுவரை ஏற்காத வேடத்தில் ரஹ்மான்!

மண் சார்ந்த உணர்ச்சிகரமான படைப்பாக பாரதி பாலகுமாரன் இயக்கும் படத்தில் இதுவரை ஏற்காத வேடத்தில் ரஹ்மான்!

Published on

தெய்வ நம்பிக்கைகள் மற்றும் நாட்டுப்புற மரபுகளின் பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் உலக ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மண் சார்ந்த கதை களத்தில் இருக்குற வாழ்வியலை பல படங்கள் பேசியுள்ளது. ஆனால் அந்த வாழ்வியலுக்கு பின்னால் மறைந்திருக்குற பல ‘அமானுஷ்ய’ கதைகள் நம்ம ‘நாட்டார்’ மரபில் உண்டு. அப்படி ஒரு ‘நாட்டார் மர்மக்கதை’ தான் இக்கதை.
நாட்டார் மர்மக்கதையை களமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ரகுமான் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 1980களின் பின்னணியில் நடக்கும் கதையில் ‘அமானுஷ்ய’ சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை காக்க முயற்சிக்கும் ஜமீன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். 250-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வந்த ரகுமானின் திரை பயணத்தில் இந்த படம் மிக முக்கியமானதாக இருக்கும்” என்கிறார்கள் படக்குழுவினர்.
 GENTLEWOMAN படத்தை தயாரித்த கோமளா ஹரி பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கோமளா, ஹரி பாஸ்கரன் தனது நான்காவது படைப்பாக இக் கதையை மிரட்டலாக தயாரிக்கிறார்கள்.
‘புரொடக்‌ஷன்-4’ படமான இதற்கு இன்னும் பெயர் சூட்ட படவில்லை.
1980-களின் மத்தியில், தென் மாவட்டங்களில் ரத்தமும் சதையுமாய் அரங்கேறிய ‘அமானுஷ்யம்’ சார்ந்த உண்மைக் கதை என்பது, இப்படத்தை பிரமாண்ட கதையாக மாற்றியுள்ளது.
மண் சார்ந்த படைப்பான விழா படத்தை இயக்கி, அனைவர் பாராட்டையும் பெற்ற பாரதி பாலகுமாரன், கதை திரைக்கதை அமைத்து டைரக்ட் செய்கிறார்.
இதில், நாயகனாக விஷ்வா நடிக்கிறார். மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனிஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரெம்யா சுரேஷ் மற்றும் பல நடிகர், நடிகை தேர்வு நடை பெற்று வருகிறது. படப்பிடிப்பு இம்மாதம் 22ம் துவங்கி நடக்கவுள்ளது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this