HomeGeneralரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகர் அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ பட தோற்றம்!

ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகர் அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ பட தோற்றம்!

Published on

‘ராக்கா’ திரைப்படத்தின் முதல் பார்வையை நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டபோது அது சாதாராண அறிவிப்பாக இல்லாமல் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தருணமாக மாறியது. இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமான அல்லு அர்ஜூனின் ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் அறிவிப்பும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. ‘புஷ்பா2’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி மீண்டும் ஒருமுறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு ‘ராக்கா’ திரைப்படத்தில் அவருடைய முற்றிலும் புதிய தோற்றமே சான்று.
அவருடைய இந்த புதிய தோற்றத்தின் பின்னால் இருக்கும் கடின உழைப்பை படக்குழு வியந்து பாராட்டி வருகிறது. ‘ராக்கா’ படத்திற்காக அல்லு அர்ஜூனின் கதாபாத்திர தோற்றத்தை கொண்டுவர தினமும் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நட்சத்திரமான இருந்தபோதிலும் தனது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் அல்லு அர்ஜூன் செயல்படுகிறார்.
’ராக்கா’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் உடனடியாக நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கு சான்றாக, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ‘ராக்கா’வில் அல்லு அர்ஜூனின் சிக்னேச்சர் கை அசைவை ரீகிரியேட் செய்திருக்கிறார். தனது ஒவ்வொரு படத்திலும் தனது புதிய தோற்றத்தின் மூலம் டிரெண்ட் செய்யும் நடிகர் அல்லு அர்ஜுன், ‘ராக்கா’ மூலம் மீண்டும் ஒரு புதிய திரை அனுபவத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு தர இருக்கிறார். இது வெறுமனே மேக் ஓவர் மட்டுமல்ல, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடு.
ஒரு படம் வெற்றி கண்ட பிறகு அடுத்த படத்திலும் அதே பாணியை பின்பற்றாமல் அடுத்தடுத்த படங்களில் புதிய சவால்களை விரும்புவதே அல்லு அர்ஜூனின் வெற்றிக்கு காரணம். இந்திய சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பிறகும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உழைத்து வருகிறார் அல்லு அர்ஜூன்.
ஓய்வின்றி உழைப்பது, அர்ப்பணிப்புடன் செயல்படுவது, தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வது போன்றவையே உண்மையான நட்சத்திர அந்தஸ்து  என்பதை அல்லு அர்ஜுன் மீண்டும் ஒருமுறை ‘ராக்கா’ பட அறிவிப்பில் தனது புதிய தோற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இந்தப் படமும் இந்திய சினிமாவை உலகளவில் பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this