HomeUncategorizedசெஃப்பாக விரும்பும் ஹவுஸ்கீப்பிங் ஊழியர் சந்திக்கும் ஒடுக்குமுறை... பரபரப்பான கதையில் 'ரிசார்ட்’  வெப் சீரிஸ்  ஜியோஹாட்ஸ்டாரில்...

செஃப்பாக விரும்பும் ஹவுஸ்கீப்பிங் ஊழியர் சந்திக்கும் ஒடுக்குமுறை… பரபரப்பான கதையில் ‘ரிசார்ட்’  வெப் சீரிஸ்  ஜியோஹாட்ஸ்டாரில் மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது!

Published on

ஜியோஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடான ‘ரிசார்ட்’ எனும் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் வரும் மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 4 புதிய எபிசோட்கள் வெளியாகும் வகையில், இதன் ஒளிபரப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=rlLjLSD3e70
பிரபல ‘எருமை சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இத்தொடரில் கதாநாயகனாக நடிப்பதோடு, கதையையும் எழுதியுள்ளார். சின்னத்திரையின் முன்னணி இயக்குநரான பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் முதன்முறையாக இந்த சீரிஸின் மூலம் கைகோர்த்துள்ளார்.
‘ஆர்.ஆர் ரிசார்ட்’ என்ற கற்பனையான சொகுசு விடுதியில் இக்கதை நகர்கிறது. முறையான கல்வி கற்காத, ஆனால் சமையல் கலையில் அபார  திறமை கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி, ஒரு தலைசிறந்த செஃப் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். ஒருபுறம் அவரது லட்சியம், மறுபுறம் பணியிடத்தில் இருக்கும் அதிகார ஒடுக்குமுறை என இவை இரண்டிற்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான மோதலே இந்த சீரிஸின் மையக்கரு.
கோபக்கார தலைமைச் சமையல்காரராகவும், கதையின் முக்கிய வில்லனாகவும் ‘தலைவாசல்’ விஜய் நடித்துள்ளார். சமையலறையின் பரபரப்பான சூழலைத் தனது மிரட்டலான நடிப்பால் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் கீர்த்தி அமர், அபிநயா நேத்ரன், தர்ஷனா ஸ்ரீபால், சாய் தன்யா மற்றும் படவா கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
காமெடி, டிராமா, லட்சியம் மற்றும் ஒரு சொகுசு விடுதியின் பின்னணியில் நடக்கும் கலாட்டாக்கள் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்குத் சீரிஸாக ‘ரிசார்ட்’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசார்ட் சீரிஸ் வரும்  மார்ச் 13 முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 4 எபிசோட்களாக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this