HomeCinemaவிறுவிறுப்பாக நடந்துவரும், பஸில் ஜோசப் - எல் கே அக்ஷய் குமார் நடிக்கும் 'ராவடி' படத்தின்...

விறுவிறுப்பாக நடந்துவரும், பஸில் ஜோசப் – எல் கே அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு!

Published on

பஸில் ஜோசப் – எல் கே அக்ஷய் குமார் நடிப்பில் காமெடி என்டர்டெய்னராக தமிழ், மலையாள மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸை இசையமைப்பாளர் ‘ராக் ஸ்டார்’ அனிருத் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கிளிம்ஸில் பஸில் ஜோசப் – எல் கே அக்ஷய் குமார்- ஜாபர் – நோபல்- அருணாசலம் – ஆகியோரின் தோற்றங்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கும் இந்த படத்தில் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் பி ஏ, ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை பி எஸ் ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், கே அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார் தயாரிக்கிறார். எல் கே விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this