HomeCinemaபார்வையாளர்களிடம் ஆர்வத்தையும் பல கேள்விகளையும் எழுப்பும் விதத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின்...

பார்வையாளர்களிடம் ஆர்வத்தையும் பல கேள்விகளையும் எழுப்பும் விதத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியானது!

Published on

விஜய் தேவரகொண்டா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார்.

ஹைதராபாத்தில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்வில் படத்தின் இரத்தம் தோய்ந்த உலகத்தை அறிமுகப்படுத்தியதுடன் ‘ரவுடி ஜனார்த்தனா’ என்ற கிளிம்ப்ஸூடன் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. படம் பற்றிய ஆர்வத்தையும் பல கேள்விகளையும் பார்வையாளர்களுக்கு இந்த கிளிம்ப்ஸ் எழுப்புகிறது. புதிய இடம், புதிய பேச்சுவழக்கு, வித்தியாசமான தோற்றம் மற்றும் இதுவரை பார்த்திராத உலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை இந்தப் படத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள இந்த கிளிம்ப்ஸ் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு டைட்டில் குறித்தான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக்கியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தீவிரமான திரை இருப்பு, கத்தி ஏந்தியிருப்பது, அவரது இரத்தக்கறை படிந்த, வலிமையான உடலமைப்பு, மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்துவது என இந்தப் படத்தில் புது அவதாரம் எடுத்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் கடுமையான தோற்றம், அற்புதமான வசன உச்சரிப்பு மற்றும் இரண்டு நிமிட கிளிம்ப்ஸில் அவரது அதிரடியான நடிப்பு ஆகியவை படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி காரு’ மூலம் பாராட்டுகளைப் பெற்ற ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை, தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

1980 களில் கிழக்கு கோதாவரியை களமாகக் கொண்ட இந்தப் படம் டிசம்பர் 2026 இல் உலகளவில் திரையரங்குகளில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை மற்றும் ஆனந்த் சி. சந்திரனின் ஒளிப்பதிவு, சுப்ரீம் சுந்தரின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் தீவிரத்தை மேலும் அதிகமாக்கும்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this