HomeCinemaபல் டாக்டருடன் பலான நட்பு... கணவருக்கு தெரிந்து விபரீதம்... கிளுகிளுப்பும் விறுவிறுப்பும் கலந்துகட்டிய ரகசிய சினேகிதனே'...

பல் டாக்டருடன் பலான நட்பு… கணவருக்கு தெரிந்து விபரீதம்… கிளுகிளுப்பும் விறுவிறுப்பும் கலந்துகட்டிய ரகசிய சினேகிதனே’ டிசம்பர் 26-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது!

Published on

சேகர் கன்னியப்பன் இயக்கத்தில் வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன் நடித்துள்ள படம் ‘ரகசிய சினேகிதனே.’

சென்னையில் கணவன் சந்தோஷுடன் வசிக்கும் சந்தியாவுக்கு பேஸ்புக்கில் பாண்டிச்சேரியில் மனைவியுடன் வசிக்கும் பல் டாக்டர் பரமேஷ் நட்பு கிடைக்கிறது. இருவரும் வாட்ஸ்ஆப்பில் மணிக்கணக்கில் சாட் செய்து, பொழுதைக் கழிக்கின்றனர். இவர்களது சாட் ஒரு வருடம் கழித்து சந்தோஷுக்கு  தெரியவர, சந்தியாவை கண்டிக்கிறான். அவனிடம் சாட் செய்வதில்லை என்று பொய் சொல்லி, அவனுக்கு தெரியாது என்று நினைத்து கொண்டு, அவன் வேலைக்கு சென்றதும் பரமேஷுடன் சாட்டிங்கை தொடர்கிறார் சந்தியா. அதை கண்டு பிடித்து சந்தோஷ் அடித்து கண்டிக்க, ஒரு நாள் திடீரென்று மர்மமான முறையில் சந்தியா இறந்து போகிறாள். போலீஸ் சந்தோஷை அடித்து விசாரிக்க, இறுதியில் சந்தியாவை யார் எதற்காக கொன்றார்கள் என்ற விளக்கத்துடன் படம் நிறைவடைகிறது.

படத்தில் குரு பிரகாஷ், பாக்கியராஜ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தை புனிக புரொடக்ஷன்ஸ் சார்பில் லதா சேகர் தயாரித்துள்ளார். படத்தை பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் என்.பி.இஸ்மாயில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 26-ம் தேதி வெளியிடுகிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சேகர் கன்னியப்பன். தயாரிப்பு லதா சேகர். இணை இயக்கம் கே.பாக்யராஜ் செல்வகுமார், ஒளிப்பதிவு ஷாம்ராஜ், இசை டாக்டர் சுரேஷ், எஸ்.சுப்பிரமண்யா, எடிட்டிங் டி.நாகராஜ் க.உதயமூர்த்தி, கலை கதிரேசன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this