HomeCinema43 வருடங்கள் கழித்து முன்னாள் மாணவர்களுடன் நடிகர் ரஹ்மான்... ஊட்டி ‘ரெக்ஸ்’ பள்ளியின் 50-ம் ஆண்டு...

43 வருடங்கள் கழித்து முன்னாள் மாணவர்களுடன் நடிகர் ரஹ்மான்… ஊட்டி ‘ரெக்ஸ்’ பள்ளியின் 50-ம் ஆண்டு நிறைவு விழா!

Published on

நடிகர் ரஹ்மான் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர். இவர் ஊட்டியிலுள்ள பிரபல தனியார் பள்ளி ‘கிறைஸ்டஸ் ரெக்ஸ்’ சீனியர் மேல் நிலை பள்ளியில் 7-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை ஹாஸ்டலில் தங்கி படித்தார். 1983 ஆம் ஆண்டு இந்த பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது தான், மலையாள பிரபல டைரக்டர் பத்மராஜன் இயக்கத்தில் மம்மூட்டி, சுஹாசினி நடித்த  ‘கூடேவிடே’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த பள்ளியின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா, நவம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக ரஹ்மான் பங்கேற்கிறார். 43 வருடங்கள் கழித்து, இதற்காக, மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து கொண்டு இன்று மாலை 4 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்தடைந்து, பின் ஊட்டிக்கு செல்கிறார்.

நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் பள்ளியின் கோல்டன் ஜூபிலி விழாவுக்கு ஊட்டி கிறிஸ்தவ பேராயர் டாக்டர். அமல் ராஜ் தலைமை தாங்குகிறார்.

மற்றும் மாநில சிறுபான்மை ஆணையர் மாண்புமிகு ரெவ்ரண்ட் டாக்டர். C. ஜியோ அருண் SJ பங்கேற்க, கௌரவ விருந்தினராக மாவட்ட ஆட்சியர் திருமதி.லக்ஷ்மி பவ்யா தநீரு , IAS மற்றும் மாவட்ட காவல் துறை ஆணையர்.திருமதி.N.S. நிஷா, IPS, வருவாய் அதிகாரி மற்றும் கூடுதல் மாவட்ட நியாயாதிபதி திரு. எம். நாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்கள்.

அடுத்த நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.

43 ஆண்டுகள் கழித்து ரெக்ஸ் பள்ளியில் கலந்து கொள்ள வருகிறார் என்பதால் ரெஸ் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this