HomeCinemaநடிகை ரம்பாவின் ரீ என்ட்ரி... உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகை ரம்பாவின் ரீ என்ட்ரி… உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார்.

அவரோடு வந்த சிம்ரன், லைலா, ஜோதிகா போன்ற நடிகைகள் இன்றும் பல முக்கிய படங்களில் நடித்து வருவதால் ரம்பாவுக்கும் நடிப்பின் மீதான ஆர்வம் மீண்டும் வந்துள்ளது. ஏற்கனவே தெலுங்குப் படத்தில் வாய்ப்புகள் வந்தாலும், மீண்டும் தமிழில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார்.

தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா, 1993 ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் கால்பதித்தார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்திய முழுதும் நட்சத்திரமாக ஜொலித்தார். 20 வருடங்களாக திரையுலகில் கோலோச்சிய இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரையுலகில் தன் நடிப்பு பயணத்தை தொடரவுள்ளதாக தெரிவுத்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து நடிகை ரம்பா பேசும்போது, ”திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும் புகழும் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்த போது, நடிப்பதை நிறுத்தி விட்டேன்.

இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என அழகான குடும்பம், ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை, ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன், இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள் என்னை ஞாபகாமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது.

சினிமாவை தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறேன், இப்போது சினிமாவின் டிரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்கள் உடன் பல விசயங்கள் பேசிக்கொண்டு இருப்பேன், என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம்” என்றார்.

Latest articles

அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பில் உற்சாகமாய் நடந்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படம் வரும்...

தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி.’

மு. மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான “அப்பா...

SPR City, Chennai, to Attempt World Record for World’s Tallest Golu at 47.8 Feet!

Inspired by SPR City’s 47-floor residential tower, the 47.8-foot Golu featuring over 4,500 dolls...

சென்னையில் உற்சாகமாய் நடந்த, நெப்போலியன் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’யின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

நெப்போலியன் நடிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவான 'அமெரிக்க ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட...

More like this