HomeCinemaநட்டி _ அருண் பாண்டியன் இணையும் 'ரைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய்...

நட்டி _ அருண் பாண்டியன் இணையும் ‘ரைட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்!

Published on

நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான ‘ரைட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான அந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல்நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும் என்பதுதான் படத்தின் மையம்.

படத்தில் பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், வில்லனாக ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரம் படப்புகழ் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்தவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார், அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் புதுமுகமாக அறிமுகமாகிறார்.

ஜில்லா, புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பரபரப்பான சம்பவங்களைக் கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான கமர்ஷியல் திரில்லராக படத்தை உருவாக்கியுள்ளார்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் RTS Film Factory நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this