HomeCinemaஎஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்க, தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் 'றெக்கை முளைத்தேன்' ஆகஸ்ட் மாதம்...

எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்க, தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘றெக்கை முளைத்தேன்’ ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது!

Published on

இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் கிராமத்து நட்பு, ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், ‘சத்ரியன்’ படத்தில் ஆக்ஷன், ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படத்தில் கிராமத்து வீரம் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் முத்திரை பதித்தவர். இப்போது ‘றெக்கை முளைத்தேன்’ படத்தின் மூலம் இன்னுமொரு புதிய களத்தில் புகுந்துள்ளார்.

இது வரை அவர் இயக்கிய படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ஜானரை சேர்ந்த ‘றெக்கை முளைத்தேன்’ படத்தை எழுதி, இயக்கி இருப்பதோடு தனது ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்தும் உள்ளார்.

தன்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ், மீராகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘றெக்கை முளைத்தேன்’ படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், “இத்தகைய படங்களைத் தான் இவர் எடுப்பார் என்ற சுழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தின் வெளிப்பாடு தான் ‘றெக்கை முளைத்தேன்’. கல்லூரியில் சேர்ந்த உடன் புதிய சிறகுகள் கிடைத்தாக உணரும் மாணவர்கள் ஒரு புறம், அதிரவைக்கும் குற்றத்தை விசாரிக்கும் காவல் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத வகையில் இப்படம் இருக்கும்,” என்றார்.

‘றெக்கை முளைத்தேன்’ படத்திற்கு தரண்குமார் பின்னணி இசை அமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிஜு வி. டான்போஸ்கோ கையாளுகிறார். பாடலுக்கான இசையை தீசன் வழங்கி உள்ளார்.

இந்த படம் கிரைம் திரில்லர் வகையில் புதிய தடத்தை பதிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

கலை இயக்கம்: பிரேம்,
ஸ்டில்ஸ்: சி.எச். பாலு, ஆடை வடிவமைப்பாளர்: திவ்யா பிரபு
தயாரிப்பு நிர்வாகி: கார்த்திக் துரை,
தயாரிப்பு மேலாளர்: அமிர்தராஜ் மற்றும் சுரேஷ், விளம்பர வடிவமைப்பு: சிவகுமார்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this