HomeCinemaராஷ்மிகா மந்தனா நடிக்கும் படத்தின் தலைப்பை நாளை வெளியிட தயாரான படக்குழு!

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படத்தின் தலைப்பை நாளை வெளியிட தயாரான படக்குழு!

Published on

தேசிய அளவில் இந்திய இளைஞர்களின் கிரஸ்  எனக் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த சில ஆண்டுகளில்  தொடர்ச்சியாக பல ப்ளாக்பஸ்டர் வெற்றிப் திரைப்படங்களை தந்து வருகிறார். புஷ்பா, புஷ்பா 2, அனிமல், மற்றும் சமீபத்திய குபேரா போன்ற படங்களில், தனது நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்ததோடு,  வித்தியாசமான களங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் வல்லவர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக Unformula Films சார்பில் உருவாகும் Production No 1, நாயகியை  மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில், தற்போது நடிகை ரஷ்மிகா மந்தனா  நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, மிக  வித்தியாசமான போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராஷ்மிகா ஒரு வாளை (spear) கையில் ஏந்தி, வலிமையான மற்றும் போராட்ட முகத்துடன் காட்சியளிக்கிறார்.

போஸ்டரை பகிர்ந்து, ராஷ்மிகா கூறியதாவது..,
“நாங்கள் எந்த மாதிரி வேலை செய்திருக்கோம் என்பதை உங்களுக்குக் காட்டும் நேரம் வந்தாச்சு! இது வரைக்கும் நீங்க பார்த்திருக்காத ஒரு புதிய ராஷ்மிகாவை… இதில் பார்க்கலாம். நானும் ரொம்பவே எக்ஸைட்டடா இருக்கேன்!”

போஸ்டரில் ‘Rashmika Unleashed’ என்ற வாசகம் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது!

மேலும், ரசிகர்களிடம் அவர் ஒரு  சவாலையும் விடுத்துள்ளார்.
“என் அடுத்த படத்துக்கான பெயரை கண்டுபிடிக்க முடியுமா? 😉 யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்கிறேன்… ஆனால் யாராவது கண்டுபிடித்தால், நிச்சயமாக உங்களை வந்து சந்திக்கிறேன்! 🐒😎” என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் இணையம் முழுக்க தாங்கள் கணித்த தலைப்பை பதிவிட்டு, வைரலாக்கி வருகின்றனர்.

இந்த படத்தின் மூலம், ராஷ்மிகா முழுமையான நாயகியாக  திரை எல்லைகளை கடந்து பயணிக்கவுள்ளார்.

Hunted. Wounded. Unbroken என்பது இந்த படத்தின் டேக் லைன். படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மற்ற விவரங்களும் நாளை வெளியாகவுள்ளன.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this