HomeCinemaரவி மோகன் முதன்முறையாக தயாரித்து நடிக்கும் 'ப்ரோகோட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா! 

ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து நடிக்கும் ‘ப்ரோகோட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா! 

Published on

ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ப்ரோகோட்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இப்படத்தின் கதையை ரவி மோகனிடம் விவரித்த போது மிகவும் ரசித்தார். அத்துடன் படத்தை தயாரிக்கவும் முன்வந்தார். இப்படத்தில் ஸ்லாப்ஸ்டிக் பாணியிலான நகைச்சுவை காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும்” என்றார்.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் நான்கு முன்னணி நட்சத்திர நடிகைகள் யார்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரவி மோகன் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி ‘ மற்றும் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘போர் தொழில்’ படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘அனிமல்’, ‘அர்ஜுன் ரெட்டி’ போன்ற வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்குநராக ஏ .ராஜேஷ் பணியாற்றுகிறார். நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் நடிகர் ரவி மோகன் தயாரிக்கிறார்.

Latest articles

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

மனதுக்கு இதம் தரும் ‘வானே வானே…’ துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=5r7Q5jS2gas பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின்...

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு....

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

More like this