HomeCinemaஇந்த படத்தில் ஹீரோயினுக்கும் எனக்கும்தான் மோதல் இருக்கும்! -ராஜபுத்திரன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இளைய...

இந்த படத்தில் ஹீரோயினுக்கும் எனக்கும்தான் மோதல் இருக்கும்! -ராஜபுத்திரன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இளைய திலகம் பிரபு பேச்சு 

Published on

இளைய திலகம் பிரபு, வெற்றி, கோமல் குமார் நடித்துள்ள ராஜபுத்திரன் படத்தை அறிமுக இயக்குனர் மஹா கந்தன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, கேயார்., இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், வசந்த், நந்தா பெரியசாமி, பேரரசு, நடிகர் ஆரி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய இளைய திலகம் பிரபு, “இதுவரை நான் 74 புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடித்து விட்டேன். இப்போதும் நடித்து வருகிறேன். இந்த படத்தில் நாயகன் வெற்றியின் அப்பாவாக நடித்திருக்கிறேன். படத்தில் ஏகப்பட்ட இளைஞர்கள். எனக்கும் அவர்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறது.

இந்த படத்தில் என் அண்ணன் டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ரொம்ப எனர்ஜியான பாடல். அந்த பாடலுக்கு என்னை ஆடச் சொன்னார்கள் நான் ஆட மாட்டேன் என்றேன். ஆனாலும் என்னை ஆட வைத்து விட்டார்கள்.

இன்றைய இயக்குனர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. நாயகி கிருஷ்ண பிரியா. நன்றாக நடித்திருக்கிறார். கதைப்பபடி எனக்கும், அவருக்கும் தான் மோதல் இருந்து கொண்டே இருக்கும்.

படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்தது. அங்குள்ள கிராமத்து மக்கள் அப்பா மீதும், என் மீதும், என் மகன் மீதும் அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள்.

என்னை வைத்து படம் இயக்கிய ஆர்.வி.உதயகுமார், ஜி.எம்.குமார் ஆகியோருடன் இந்த படத்தில் இணைந்து நடித்து இருக்கிறேன். பல இயக்குநர்கள் காமெடி நடிகர்களாக, குணசித்திர நடிகர்களாக மாறி விட்டார்கள். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this