HomeMovie Reviewபருந்து சினிமா விமர்சனம்

பருந்து சினிமா விமர்சனம்

Published on

சமூகத்துக்கும், உரிய வயதும் பக்குவமும் இல்லாமல் காதலிக்கிறவர்களுக்கும் கருத்து சொல்கிற படம்.

மதுரைப் பக்கமுள்ள ஒரு கிராமத்தில் ஒரு வசதியான குடும்பத்தின் கல்லூரிப் பருவத்தைக் கூட தொடாத பெண், அவள் தனது குடும்ப அந்தஸ்துக்கு பொருந்தாத இளைஞனைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போகிறாள். அவளைத் தேடிப் பிடிக்க தாய் மாமன், ஊர்த் தலைவர், அவரது தம்பி, அவரது காதலி என பலரும் களமிறங்குகிறார்கள்.

கண்டுபிடித்தபின் என்ன செய்வது அவர்களின் நோக்கம்? கண்டுபிடித்தார்களா? என்பதெல்லாம்தான் பருந்தின் கதை…

ஊர்த் தலைவரின் மகனாக வருகிறவர் கிராமத்து ஹீரோ போலிருக்கிறார். வில்லன்களைப் போல் அடிதடியில் ஈடுபடுகிற நடிப்பு கச்சிதம். அவரது காதலியாக போலீஸ் அதிகாரியாக வருகிற ஷர்மிஸா மெல்லிய கவர்ச்சி காட்டி, கதைக்கேற்ப எளிமையாக நடித்துள்ளார்.

ஊர்த் தலைவராக வருபவர் அழகுமலை. இந்த படத்தை தயாரித்து இயக்கியிருப்பவர். காதலர்களை தேடுகிற விஷயத்தில் மிரட்டலான வில்லன் போல் நடந்து கொண்டாலும் கிளைமாக்ஸில் வித்தியாசமான ஒரு விஷயத்தைச் செய்து கவனம் பெறுகிறார்.

மன்சூர் அலிகான் தாய்மாமனாக கெத்து காட்ட, வழக்கறிஞராக இயக்குநர் பேரரசு அதிரடியாக அட்டனன்ஸ் போட, அப்புக்குட்டி, சென்றாயன் சிரித்து ரசிக்க உதவுகிறார்கள். ஓடிப்போன பெண்ணின் அப்பாவாக மாரிமுத்து உள்ளிட்ட மற்றவர்களின் பங்களிப்பு நேர்த்தி.

ஜேம்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் கவர்கிறது. பின்னணி இசையில் தேவைக்கதிக பில்டப் தெரிகிறது. காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவு தரம்.

காதலர்களை தேடுகிறவர்கள், அவர்களை என்ன செய்வார்களோ ஏது செய்வார்களோ என ஆரம்பம் முதல் கடைசி வரை ஆடியன்ஸ் பரபரப்பாக இருக்கும்படி கதையை நகர்த்தி, அதில் காமெடியை அளவாக கலந்து, எதிர்பார்க்காதபடி கிளைமாக்ஸை தந்திருக்கும் இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்.

Rating 3 / 5

Latest articles

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா!

Story Culture நிறுவனம் தயாரிப்பில், Saregama India Limited நிறுவன வெளியீட்டில்,  பாலாஜி – மதுமிதா நடிப்பில், சசி...

விஜய் சேதுபதி – திரிஷாவின் ’96’ அக்டோபர் 9லிருந்து மீண்டும் திரையரங்குகளில்!

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர்...

காவேரி மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கான ‘சமத்வா’ சிறப்பு மையத்தை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்!

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு விரிவான, ஒருங்கிணைந்த சிகிச்சை, அத்துடன் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான பிரத்யேக...

சூனியக்காரி, தேவதை, ப்ளாக் ஹோல்… ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=bKJve0D7p-Y GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). சித்தி...

More like this