HomeUncategorizedசூனியக்காரி, தேவதை, ப்ளாக் ஹோல்... ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

சூனியக்காரி, தேவதை, ப்ளாக் ஹோல்… ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

Published on

GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரைஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
ப்ளாக் ஹோல் எனும் மர்மமான இடத்துக்குள் நுழையும் மூவர், அந்த இடம் குறித்து விசாரணை நடத்தும் காவல் அதிகாரி, சூனியக்காரிக்கும் தேவதைக்கும் இடையே நடக்கும் மோதல் எனப் பல வித்தியாசமான அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி உலகத்தை நம் கண்முன்னே விரிக்கிறது ‘டிரோன்ஸ்’ டிரெய்லர். ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் ஆகிய அம்சங்களுடன் காமெடியும் கலந்து வெளியாகியுள்ள இந்த டிரெய்லர், ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விருந்தாக அமைந்துள்ளது.
இதற்கிடையே, படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. சிவப்பு நிற ஆடையில் சூனியக்காரி போன்ற தோற்றத்தில் ஒரு பெண்ணும், வெள்ளை நிற ஆடையில் தேவதை போன்ற தோற்றத்தில் மற்றொரு பெண்ணும் நேருக்கு நேர் மோதும் வகையில் இந்தப் போஸ்டர் அமைந்துள்ளது. இருவருக்கும் இடையே உருவாகும் மாயாஜால சக்திகளும், ‘விட்ச் Vs ஏஞ்சல்’ என்ற மோதலும் படத்தின் கற்பனை உலகத்தை வெளிப்படுத்துகின்றன. ஏற்கெனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் புதிய போஸ்டரும் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன.
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை R. ராகவ் மிர்தாத் கவனித்துள்ளார். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி S.R. இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கற்பனையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மர்மமான கதாபாத்திரங்கள், மாயாஜாலக் காட்சிகள், விறுவிறுப்பான சம்பவங்கள் எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’, வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் இப்படம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் காமெடி அம்சங்களை ஒன்றிணைத்துள்ளது. குறிப்பாக, வித்தியாசமான கற்பனை உலகங்களையும் மாயாஜாலக் கதைகளையும் விரும்பும் ரசிகர்களுக்கு ‘டிரோன்ஸ்’ புதிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
GM Morgan Films தயாரிக்கும் இப்படத்தை, ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் K. செந்தில் வெளியிடுகிறார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Latest articles

காவேரி மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கான ‘சமத்வா’ சிறப்பு மையத்தை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்!

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு விரிவான, ஒருங்கிணைந்த சிகிச்சை, அத்துடன் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான பிரத்யேக...

SharonPly Honours Five Masters of Woodcraft at Seventh I AM STRONGEST Awards!

CARVED IN STRENGTH celebrates artisans preserving generations of craftsmanship while adapting traditional woodcraft for...

அன்பில் அவன் படத்தின் வெற்றி… கொண்டாட்டத்தில் ஈடுபட்ட படக்குழு!

அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில்,ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன்...

தைவான் சர்வதேச டிசைன் விழாவில் தமிழின் கலைப் பார்வையை உலகுக்கு எடுத்துச் சென்ற கோபி பிரசன்னா

தைவானில், 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச டிசைன் ஃபெஸ்டிவல் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 11 ஆம் தேதி...

More like this