HomeMovie Reviewபறந்து போ சினிமா விமர்சனம்

பறந்து போ சினிமா விமர்சனம்

Published on

பரபரப்பான ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கை; பெருகிக்கொண்டே போகும் செலவுகள்; பணம் சம்பாதிக்க வேண்டி கணவனும் மனைவியும் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயம்; குழந்தைகளுக்கு செலவிட நேரமில்லாத சூழ்நிலை… இப்படியே நாட்கள் நகரும்போது நம் வீட்டுப் பிள்ளைகளின் ஆசையைப் புரிந்து கொள்ள மறந்து போகிறோம். அந்த மறதி தவறென உணர்ந்து, தங்கள் பிள்ளை விருப்பம்போல் ‘பறந்து போ’க வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் பெற்றோர் உன்னதமானவர்கள்.

சமூகத்துக்கு தேவையான இந்த விஷயத்தை கருத்தாழத்துடனும் காமெடி கலகலப்புடனும் சொல்லியிருக்கிறது இயக்குநர் ராமின் ‘பறந்து போ.’

சிவா, கிரேஸ் ஆண்டனி தம்பதி வேலைப் பளுவால் தங்கள் மகனைக் கவனிக்காமல் வீட்டுக்குள்ளேயே அடைத்துப்போட்டு படிக்க வைக்க, ஒரு கட்டத்தில் அவன் மனம் நொந்து போகிறான். சிவா அவனது மனதை உற்சாகமாக்க நினைக்கிறார். அதற்காக அவனை பைக்கில் ஏற்றிக்கொண்டு லாங் டிரிப்’ புறப்படுகிறார்.

அந்த பயணத்தில் அவன் எப்படியெல்லாம் உற்சாகமடைகிறான் என்பதும், அந்த டிரிப் அவனது அப்பா அம்மாவுக்கு என்ன பாடம் கற்றுத் தருகிறது என்பதும் கதையின் மீதி…

ஒரு பிள்ளைக்குத் தந்தை, அவனது உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவனை குஷிப் படுத்திப் பார்க்கிற பொறுப்பு என சிவாவுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் கனமானது. நடிப்பில் அதற்கான முதிர்ச்சியைத் தந்து ஆச்சரியப்படுத்துகிற சிவா, வழக்கமான தனது பிராண்ட் டயலாக் டெலிவரியாலும், மேனரிசத்தாலும் அசத்துகிறார்.

சிவாவின் மனைவியாக வருகிற கிரேஸ் ஆண்டனி, கணவன் மீதும் மகன் மீதும் வைத்திருக்கும் பாசத்தை வெளியூரிலிருந்து கடத்தும் நிமிடங்கள் படத்தின் உயிரோட்டமான எபிசோடுகள்.

அப்பாவுடன் டிரிப் புறப்பட்டபின் ஸ்கேட்டிங் போர்டில் ஏறி மனம் போன போக்கில் சுற்றித் திரிவது, ஓங்கி உயர்ந்த மலை மீது ஏறி நின்று கொண்டு இறங்கி வர முடியாமல் தவிப்பது, தன் கிரஸான குட்டிப் பெண்ணுடன் ஜாலியாக விளையாடுவது என தன் சேட்டைகளால் ரசிக்க வைக்கிறான் சுட்டிப் பையன் மிதுன்.

சிவாவின் பள்ளிப்பருவ கிரஸான அஞ்சலி வருவது கொஞ்ச நேரம்தான் என்றாலும் குதூகலத்துக்குப் பஞ்சமில்லை. அஞ்சலியின் கணவராக கள்ளங்கபடமற்ற மனதுக்காரராக வருகிற அஜு வர்கீஸின் அலட்டலற்ற நடிப்பு கவர்கிறது.

பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ் என மற்றவர்கள் கதை கேட்டதை செய்திருக்கிறார்கள்.

மதன் கார்க்கி குழந்தைகளின் உலகம் எப்படியெல்லாம் இருக்கும் என யோசித்து இப்படியெல்லாம் இருக்கும் என்ற தெளிவுக்கு வந்து ஏகப்பட்ட சின்னஞ்சிறு பாடல்களை எழுதிக் குவிக்க, அதற்கு ரசனையுடன் இசையமைத்து இதம் பரப்பியிருக்கிறார் சந்தோஷ் தயாநிதி. யுவனின் பின்னணி இசை காட்சிகள் கடத்தும் உணர்வுகளுக்கு துணை நிற்கிறது.

அப்பாவும் மகனுமாக இனிமையாய் பயணிக்கும் பாதைகள், காடு மேடுகள், பசுமை படர்ந்த நிலப்பரப்புகள் என பலவற்றை பார்த்துப் பார்த்து பரிமாறி கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.

படம் சமூகத்துக்கு பாடம் நடத்துவதைப் போன்ற கதையைக் கொண்டிருந்தாலும் திரைக்கதையில் காமெடி கலாட்டாக்களை அள்ளி வீசியிருப்பதால் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது.

நிறைவாக ஒரு வார்த்தை… படம் பார்க்க குடும்பத்துடன் ‘பறந்து போ’கலாம்; கவலை மறந்து ரசிக்கலாம்!

Rating 4 / 5

சிவா

Latest articles

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தாழ் திறவா’ படத்தின் டீசருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், 'தாழ் திறவா' படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப்...

உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஸ்பாட்டிஃபை உட்பட பிரபல தளங்களில் வெளியானது!

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா...

இந்த படத்தின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது; சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால்தான் சினிமா வாழ்கிறது! -‘விசாரணை கைதி’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு 

அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ...

ராம்சரணின் ‘பெத்தி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது…

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி...

More like this