HomeCinemaமலேசிய ஹீரோ யுவராஜ் கிருஷ்ணசாமி நடிக்கும் அரசியல் கள உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவான படைப்பாளி...

மலேசிய ஹீரோ யுவராஜ் கிருஷ்ணசாமி நடிக்கும் அரசியல் கள உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவான படைப்பாளி ரிலீஸுக்கு தயாராகிறது!

Published on

மலேசிய தமிழ்த் திரையுலகில் 20க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள‌ யுவராஜ் கிருஷ்ணசாமி கதைநாயகனாக நடிக்க, திரையுலகத்திலும் அரசியல் களத்திலும் நடக்கும் உண்மைச் சம்பவங்களில் அடிப்படையில் பரபரப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘படைப்பாளி.’

படத்தை இயக்கி, இரண்டாம் நாயகனாக நடித்துள்ளார் பாலாஜி ஜெயபாலன்.

சில உண்மை சம்பவங்களில் அடிப்படையில் இந்த படம் உருவாகியுள்ள‌து. தனது முதல் படத்தை இயக்கும் ஒரு இளைஞனும் ஆணவக் கொலைகள் குறித்த அவனது படைப்பும் திரையுலக மற்றும் நிஜ அரசியலை எதிர்கொள்வதே படத்தின் மையக்கரு.

நடிகை சவுந்தரியா கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பாளர் கே.ராஜன், ‘காதல் கண்கட்டுதே’ திரைப்படத்தின் இயக்குநர் சிவராஜ், கார்த்திகேயன் கோவிந்தராஜ், பிரசாந் வர்மன், ஏ.எம்.எஸ். ஹரிகிருஷ்ணன், பிரியதர்ஷினி, டோமினிக், ஆண்ட்லின், தர்மராஜ், பிரதீப், தயனேஷ், கார்த்திக் மானஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘சென்னை ‍ 28’, ‘பேரழகன்’ உள்ளிட்ட‌ 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெற்றிகரமாக‌ விநியோகித்த முன்னணி விநியோகஸ்தரான‌ பிரம்மா அன்புராஜ் தனது ஏவிஆர் அன்பு சினிமாஸ் பேனரில் தயாரிக்கும் முதல் படம் இது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது “வெற்றிப்பட விநியோகஸ்தரான பிரம்மா அன்புராஜ் அவர்களின் முதல் தயாரிப்பை இயக்குவது மகிழ்ச்சி. யுவராஜ் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக செல்லும் வகையில் உருவாகியுள்ளது” என்றார்.

படம் விரைவில் வெளியாகவுள்ளது.

படக்குழு:-
இணை இயக்குநர்கள்: குமரகுரு, ராம்ஜி, சக்தி, பிரபு
இசை: எஸ்.ஆர். ராம்
ஒளிப்பதிவு: மிதுன் சந்திரன், ரஜேஸ் டி.ஜி
படத்தொகுப்பு: ஆஞ்சேஷ், ஆண்டனி பிரிட்டோ
எஸ்.ஃஎப்.எக்ஸ்: ஃஎப்.எக்ஸ் ஸ்டுடியோ
வி.ஃஎப்.எக்ஸ்: சினிஃபைல் ஸ்டுடியோ

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this