HomeCinemaமலையாள பிளாக்பஸ்டர் 'பிரேமலு' எப்ரல் 12-லிருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங்!

மலையாள பிளாக்பஸ்டர் ‘பிரேமலு’ எப்ரல் 12-லிருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங்!

Published on

மலையாளத்தில் உருவான கலக்கலான ரொமான்ஸ் காமெடி படமான ‘பிரேமலு’ சமீபத்தில் தென்னிந்தியா முழுவதும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. கிரிஷ் ஏ டி இயக்கத்தில் உருவான இந்த படத்தில், நஸ்லென், மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. பின்னர் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும் பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது. ஹைதராபாத்தில் அவன், ஐடி துறையில் பணிபுரியும் ரீனுவைச் சந்திக்கிறான், அவர்கள் நண்பர்களாகிறார்கள். சச்சின் ரீனுவை ஒருதலையாகக் காதலிக்க ஆரம்பிக்க, அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், நம்மை ஒரு அழகான பயணத்திற்குக் கூட்டிச் செல்கிறது.

நஸ்லென், மமிதா, சங்கீத் பிரதாப், மற்றும் அகிலா பார்கவன், முதன்மைப்பாத்திரங்களில் அசத்தியுள்ளனர். ‘ஜேகே’யாக ஷியாம் மோகன் அனைவரையும் கவரும் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார். மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், ஷமீர் கான் மற்றும் கே எஸ் பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேத்யூ தாமஸ் ஒரு அழகான கேமியோவாக பாத்திரத்தில் தோன்றியுள்ளார். சியாம் புஷ்கரன் சிறு கதாபாத்திரத்தில் ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

Latest articles

இந்த படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன்; நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! -சென்னையில் நடந்த எங்கள் தங்கம் பட விழாவில் நடிகை சமந்தா பேச்சு

சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை சமந்தா...

மக்கள் தலைவா சினிமா விமர்சனம்

தமிழகத்தின் தேர்தல் அரசியல் எந்தளவுக்கு சீர் கெட்டுப் போயிருக்ககிறது என்பதையும், ஓட்டு போடும் மக்களிடமிருக்கும் முட்டாள்தனத்தையும் பொலிடிக்கல் சட்டயர்...

ஜூலை 17ல் வெளியாகிறது ‘அன்பே டயானா.’ அசத்தலான போஸ்டரில் அறிவித்த படக்குழு.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம்,...

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடக்கம்… ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு!

'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30...

More like this