HomeCinemaகதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங்... கின்னஸ் சாதனையாளர் எஸ். லாவண்யா...

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங்… கின்னஸ் சாதனையாளர் எஸ். லாவண்யா 31 துறைகளில் பணியாற்றியிருக்கும் ‘பேய் கொட்டு’ விரைவில் தியேட்டர்களில்!

Published on

அறிமுக இயக்குநர் எஸ்.லாவண்யா இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஹாரர் திரில்லர் படம் ‘பேய் கொட்டு.’

இந்த படத்தில் இசையமைப்பு, எடிட்டிங் என மொத்தம் 31 துறைகளில் பங்களிப்பு வழங்கியுள்ளார். தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக 31 துறைகளில் பணிபுரிந்துள்ள முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. கின்னஸ் சாதனையாளராகியிருக்கிற இவரது முயற்சி திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

படத்தில் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”சுயாதீன திரைப்பட படைப்பாளியான நான் திரைத்துறையில் இயங்கும் அனைத்து கிராப்டுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன். இதைத்தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், ஃபைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எஃப் எக்ஸ், வி எஃப் எக்ஸ், எஸ் எஃப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன் என ஆகிய 31 கிராப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, இந்த படத்தை உருவாக்கியிருக்கிறேன்.
‘பேய் கொட்டு’ என்பது தவறுகள் செய்தால் தலையில் கொட்டுவார்கள் அல்லவா… அதே போல் நாம் ஏதேனும் தவறாக நினைத்தால், பேய் நம் தலையில் கொட்டும். இது வித்தியாசமான கதைக்களமாகவும், சுவாரசியமான திரைக்கதையாகவும் உருவாகி இருக்கிறது” என்றார்.

சாதனை இயக்குநர் லாவண்யா பெற்றுள்ள உலகளவிலான அங்கீகாரங்கள்:

1. BOOK OF WORLD RECORDS USA (America)

2. WORLD WIDE BOOK OF RECORDS, (UK)

3. WORLD ACHIEVERS BOOK (UK)

4. INFLUENCER BOOK OF WORLD RECORDS(UK)

5. INDIA’SWORLDRECORDS(INDIA)

6. UNICORN WORLD RECORDS (UK)

7. KALAM’S WORLD RECORD

8. SIGARAM AWARDS 2023 from Director k.Bakyaraj sir

9. LONDON BOOK OF WORLD RECORDS for covering31 departmens
(3 Awards)(LONDON)

10. LONDON BOOK OF WORLD RECORDS for BEST DIRECTOR & ACTOR

11. LONDON BOOK OF WORLD RECORDS for BEST MUSIC DIRECTOR & PLAYBACK SINGER

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this