அறிமுக இயக்குநர் கண்ணன் சாவித்திரி நடித்து இயக்கியுள்ள குறும்படம் ‘பண்டமாற்று.’
ஜெயசுதா, பாட்ஷா, மகாலட்சுமி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் சிறப்புத் திரையிடலில் சிறப்புத் திரையிடலில் நடிகர் அப்புக்குட்டி, இயக்குநர் ராசி அழகப்பன், நடிகர் காதல் சுகுமார், இயக்குநர் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய நடிகர் அப்புக்குட்டி, ”இந்த படத்தின் கதை வட்டிக்கு பணம் வாங்குவது, பைக், கார் அடமானம் வைப்பது. அதனால் வரும் பிரச்சினைகளை சொல்கிறது.
நானும் எனது காரை அடமானம் வைத்து, அவதிப்பட்டு உள்ளேன். எல்லா நடிகர்களும் வசதியானவர்கள் இல்லை. 10 சதவீதம் நடிகர்கள் தான் வசதியாக இருக்கிறார்கள். அதனால் நடிகர்களே, லோன் வாங்கி கார் வாங்காதீங்க! ஒரு மாதம் வருமானம் வரும். பல மாதங்கள் வருமானம் வராது. மாட்டிக்கிவீங்க. எனது அனுபவத்தில் சொல்கிறேன் என்றார்.
‘பண்டமாற்று’ குறும்படம் விரைவில் திரைப்படமாக உருவாக உள்ளது.
படக்குழு:-
தயாரிப்பு – புஷ்வானம் டாக்கீஸ்’ கண்ணன் சாவித்திரி
ஒளிப்பதிவு & எடிட்டிங் – பாண்டி அருணாசலம்
இசை – அர்ஜுன் வி.அகஷயா
பிஆர்ஓ – கோவிந்தராஜ்

