ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ படத்தை, ‘பலேகம்’ புகழ் வேணு யெல்தண்டி இயக்குகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தசரா பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தில்ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படம் உருவாகி வருகிறது.
ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் ‘எல்லம்மா’ திரைப்படம் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘எல்லம்மா’ திரைப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

