HomeGeneralசந்தீப் கிஷன் நடிக்கும் 'பவர் பேட்டா' படத்தின் டைட்டில் லுக் வெளியானது!

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது!

Published on

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் – கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

‘பவர் பேட்டா’ எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட… யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் – கௌரவம் – அரசியல்- ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்… ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.

இயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான… பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து ‘பவர் பேட்டா’ ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க … ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.

கவர்ச்சிகரமான தலைப்பு – ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் ‘பவர் பேட்டா’ திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்… அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.

இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this