HomeCinemaஇந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் பராசக்தி! -நடிகர்...

இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் பராசக்தி! -நடிகர் சிவகார்த்திகேயன்!

Published on

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ்த் திரையுலகின் முன்னணி வசூல் நாயகனாக வலம் வருபவர். பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார். பொதுமக்கள் அனைவரையும் கவரும் வகையில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தனித்த அடையாளம் கொண்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உலகம் முழுவதும் நாளை (ஜனவரி 10, 2026 அன்று) வெளியாக உள்ள ’பராசக்தி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்துள்ளது பற்றி தனது அனுபவங்களை சிவகார்த்திகேயன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார், “’பராசக்தி’ கதையுடன் சுதா கொங்காரா என்னை அணுகியபோது கலவையான உணர்வுகள் எனக்குள் இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உற்சாகம் இருந்தாலும், அவரது அற்புதமான திரைக்கதைக்கு நான் நியாயம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த பொறுப்புணர்வுடன் அணுகினேன். என் வழக்கமான இமேஜைத் தாண்டி, வேறொரு பரிமாணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இயக்குநராக சுதா கொங்காரா என்னிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ரசிகர்களும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ரவி மோகன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கவே இல்லை. இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது எனக்கு நம்ப முடியாத ஆச்சரியம்தான். செட்டில் அனைவரிடமும் எளிமையாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார். நீண்ட காலமாக அவரை திரையில் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால், நேரில் அவரின் பணிவும் நேர்மறை அணுகுமுறையும் எனக்கு பெரும் உற்சாகம் கொடுத்தது. இந்தப் படத்தில் அதர்வா முரளியின் நடிப்பு அவரது ரசிகர் வட்டத்தை இன்னும் அதிகமாக்கும்.

ஸ்ரீலீலாவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் வெளியான பிறகு அவரின் நடிப்பு நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும். நம் இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’. இந்த படம் சிறப்பான முழுமையான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும்.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் ஆதரவு இல்லாமல் ’பராசக்தி’ இல்லை. ஒவ்வொரு காட்சியையும் உயர்ந்த தரத்துடன் உருவாக்க எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்ததற்காக அவருக்கு நன்றி” என்றார்.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நூறாவது படம்.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this