HomeGeneralதிருத்தணி சம்பவத்துக்கு தற்போதைய சினிமாக்களும் காரணம்! -இயக்குனர் பேரரசு!

திருத்தணி சம்பவத்துக்கு தற்போதைய சினிமாக்களும் காரணம்! -இயக்குனர் பேரரசு!

Published on

நாட்டில் நடக்கும்
தொடர் வன்முறைக்கு
அரசாங்கத்தையும்,
அரசியல்வாதிகளையும்,
காவல் துறையையும்
சமூக அவலங்களையும் மட்டும்
குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு சினிமாவும் பொறுப்பேற்க வேண்டும்! சில சினிமாக்களும் இதுக்கு காரணம் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்!
எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் (பழைய படங்கள்) விஜயகாந்த் போன்ற பல ஆக்சன் ஹீரோக்களின் படங்கள் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் இப்படி வன்முறையான சண்டைக் காட்சிகள் இருந்ததில்லை!
கம்பராமாயணம் படமாக்கப்பட்டிருக்கிறது, மகாபாரதம் படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் வரும் யுத்த களத்தில் ஆயிரக்கணக்கான பேர் மோதிக் கொண்டாலும், பலியானாலும் எதிலுமே முகம் சுழிக்கும் வன்முறை தெரிந்ததில்லை!
கலிங்கத்துப் போரைவிடவா சண்டை இருந்துவிடப் போகிறது?
ராணுவ சண்டை காட்சிகள் நிறைந்து எத்தனை படம் வந்திருக்கிறது? அதில் எங்கே வன்முறை கண்டோம்? தற்பொழுதைய சில திரைப்படங்களில் வன்முறை! வன்முறை!! வன்முறை!!!
திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்துப் போகவே பயமாக இருக்கிறது!
வன்முறையை தூண்டும் படங்களும், நாட்டில் ஒற்றுமை குழைக்கும் படங்களும்,
பிரிவினையை தூண்டும் படங்களும், ஆபாச வசனங்களை அள்ளித் தெளிக்கும் படங்களும்,
படம் முழுக்க குடித்துக் கோண்டே இருக்கும் காட்சிகளும், கதாநாயகர்களே போதைப்பொருள் கடத்துவதும்
நாட்டில் வன்முறைக் கலாச்சாரம் அதிகரிப்பதற்கு காரணமாகின்றன என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை!
சமூகத்தின் மீது அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறதோ! அதே அளவு திரைப்பட இயக்குனர்களுக்கும், முக்கியமாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களுக்கும் வேண்டும்!
வன்முறை இல்லாத சண்டை காட்சிகள் அமைப்பதே
சினிமாவுக்கு ஆரோக்கியம்!
சமூகத்திற்கும் ஆரோக்கியம்!

-இயக்குனர் பேரரசு

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this