HomeCinemaஒரே வாரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த, டி. ராஜேந்தர் பாடிய ‘பாட்டி சொல்லைத் தட்டாதே'...

ஒரே வாரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த, டி. ராஜேந்தர் பாடிய ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படப் பாடல்!

Published on

எ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், மனோரமா பாட்டியாகவும், பாண்டியராஜன் பேரனாகவும் அவர்களுடன் ஊர்வசி, சில்க் ஸ்மிதா, அனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்து 1980 காலகட்டத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற நகைச்சுவை திரைப்படம் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே.’

90கிட்ஸ்,2k கிட்ஸ் ரசிகர்களுக்கு அந்த நகைச்சுவை அனுபவத்தை மீண்டும் கொடுப்பதற்காக ஏவி எம் நிறுவனத்திடம் இருந்து டைட்டிலை அனுமதி வாங்கி. வின்னர் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட், மற்றும் விஷ்ணு பிரியா சஞ்சய் பிலிம்ஸ் சார்பில் ஹேம சூர்யா, சஞ்சய் பாபு & ஜூலி, தனசேகரன் இணைந்து அதிக பொருட்செலவில் பாட்டி பேரன் உறவை உணர்வுபூர்வமாகவும் காமெடி, காதல் கலந்தும் காட்சிபடுத்துகிற படமாக ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படத்தை உருவாக்கியுள்ளனர்.

ஆர்.ஜே.விஜய் கதாநாயகனாகவும். அனுஷீலா கதாநாயகியாகவும் முக்கிய வேடத்தில் பாண்டிய ராஜன், எம்.எஸ்.பாஸ்கர், கலக்கப் போவது யாரு பாலா, பவர்ஸ்டார் சீனிவாசன், நளினி, உள்ளிட்ட எராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது.

விஜய் சங்கர் இசையில் படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளது. அதில் டி.ராஜேந்தர் பாடிய ‘கோலி சோடா ரம்மு கலந்து குடிக்கிறான்’ என்ற பாடல் கடந்த அக்டோபர் 6ம் தேதி வெளியானது. நடிகர் நட்டி தனது இணைய பக்கத்தில் இந்த பாடலை வெளியிட்டார்.

டி.ராஜேந்தர் தனக்கேயுரிய ஸ்டைலில் கலக்கலாக பாடியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் குறிப்பாக குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டி.ராஜேந்தர் குரலுடன், துள்ளலிசையும் கலந்த இந்த பாடல் வெளியான எழு நாட்களுக்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

அதையடுத்து பாடலை எழுதியவரும் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளவருமான ஹேமசூர்யா பாடலை ரசித்து ஹிட்டாகியிருக்கிற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இவர் கன்னடத்தில் மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். பிரபல கன்னட ஹீரோக்கள் உபேந்திரா, தர்ஷன், சுதீப், கணேஷ் உள்ளிட்டோர் நடித்த படங்களுக்கு கதையெழுதி வெற்றிகரமான படைப்புகளை தந்தவர். கன்னட படங்களில் பணியாற்றி னாலும் இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

சென்னை, திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

படக்குழு:-
ஒளிப்பதிவு – கே.எஸ்.செல்வராஜ்
வசனம் – சுகுணகுமார்
இசை – விஜய் சங்கர்
எடிட்டிங் – சசிகுமார், கலை -மணிமாறன்
நடனம் – சங்கர்

Latest articles

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தொழில்துறை சூழலை பாதுகாக்க ஒன்றிணைகின்றனர்; புதிய சங்கத்திற்கான வழிநடத்தல் குழு அமைப்பு

ஹைதராபாத், 19ஆம் ஏப்ரல் 2026 அன்று Hotel Dasapalla-வில் நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு...

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=h5OHXjkAgbA தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

More like this