HomeCinemaகோயில் அர்ச்சகரின் மகளுக்கு பனைத் தொழிலாளி மீது காதல்... விறுவிறுப்பான கதையுடன் பனை மரத்தின் மகத்துவத்தை...

கோயில் அர்ச்சகரின் மகளுக்கு பனைத் தொழிலாளி மீது காதல்… விறுவிறுப்பான கதையுடன் பனை மரத்தின் மகத்துவத்தை எடுத்துச் சொல்லும் ‘பனை’ திரைப்படம் இந்த மாதம் ரிலீஸாகிறது!

Published on

ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து ரகுவரன், பிரகாஷ்ராஜ் போல் அட்டகாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘பனை.’

நாயகனாக ஹரிஷ் பிரபாகரனும் நாயகியாக மேக்னாவும் நடிக்க, ஆதி பி.ஆறுமுகம் இயக்கியுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வடிவுக்கரசி,அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், லாலா கடை ரிஷா, ஜேக்கப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தை தயாரித்துள்ள எம்.ராஜேந்திரன் படம் பற்றி பேசியபோது ”பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். பனைமரம் பாரத தேசமெங்கும் பரவ வேண்டும் என்ற மையக் கருத்தையும், கோயில் அர்ச்சகரின் மகள் பனைத் தொழில் புரியும் இளைஞர் மீது ஏற்படும் ஒரு தலை காதலால் நிகழும் விபரீதங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம் இது” என்றார்.

படத்தில் பனைமரம் பனைமரம் பணம் காய்க்கும் பனைமரம் பசி தீர்க்கும் மரமய்யா பனைமரம்… உள்ளிட்ட மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘ஆக்சன் ரியாக்சன்’ ஜெனிஷ் வெளியிடுகிறார்.

படக்குழு:-

பாடல்கள் – வைரமுத்து

இசை – மீரா லால்

ஒளிப்பதிவு – சிவக்குமார் ரங்கசாமி

நடனம் – தினா

மக்கள் தொடர்பு – வெங்கட்

இணைத் தயாரிப்பு – ஜெ.பிரபாகரன்

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this