HomeCinemaமிர்ச்சி செந்தில் நடிக்கும் 'போலீஸ் போலீஸ்' ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!

மிர்ச்சி செந்தில் நடிக்கும் ‘போலீஸ் போலீஸ்’ ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!

Published on

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் ‘போலீஸ் போலீஸ்’ வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்ற இதன் முதல் புரோமோவில் மிர்ச்சி செந்தில் (ராஜா) மற்றும் ஜெயசீலன் தங்கவேல் (முரளி) இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது இடம் பெற்றிருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் ஷபானா ஷாஜகான் நேர்மையான வழக்கறிஞர் லலிதாம்பிகா கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

கலகலப்பான இந்த புரோமோவில் லலிதாம்பிகா முரளியை திருடன் என நினைத்து விடுகிறார். முரளி பணி செய்யும் காவல் நிலையத்திற்கே அவரை அழைத்து செல்கிறார் லலிதாம்பிகா. அவர் வருத்தப்பட வேண்டும் என்பதற்கே போலியான காயத்தை தனக்கு உருவாக்கி லலிதாவை டீஸ் செய்கிறார் முரளி. இவரோடு செந்திலும் சேர்ந்து கொள்ள இந்தத் தொடர் ஆக்‌ஷன், ஹியூமர் மற்றும் ரொமான்ஸ் இருப்பதை உறுதி செய்கிறது.

இந்தத் தொடரில் நடிகர்கள் மிர்ச்சி செந்தில், சுஜிதா தனுஷ், ஜெயசீலன் தங்கவேல், ஷபானா ஷாஜகான், சத்யா, வின்செண்ட் ராய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவான ‘ஆஃபிஸ்’ மற்றும் ‘ஹார்ட்பீட் சீசன்2’ ஆகிய தொடர்கள் பார்வையாளர்களை ஒவ்வொரு வாரமும் கட்டிப்போடுகிறது. இந்த வரிசையில் ‘போலீஸ் போலீஸ்’ செப்டம்பர் 19 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் எக்ஸ்க்ளூசிவாக ஸ்ட்ரீம் ஆகிறது. மற்ற புரோமோ மற்றும் அறிவிப்புகளுக்கு ஜியோஹாட்ஸ்டாரை சமூகவலைதளங்களில் பின் தொடரலாம்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this