HomeCinema1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில்  குளோபல் ஸ்டார் ராம் சரண்...

1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில்  குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள பெத்தி படத்துக்கான பாடலின் படப்பிடிப்பு!

Published on

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான பெத்தி’ படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், வலிமையான உடல் மாற்றம், கடுமையான பயிற்சிகள் என அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்த அவர் தனது முழு ஆற்றலையும் தந்து உழைத்து வருகிறார்.

ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் கிளிம்ப்ஸே, ராம் சரண் மேக் ஓவர் புகைப்படங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், படக்குழு மைசூரில் குளோபல் ஸ்டார் ராம் சரண் பங்கேற்க, பிரம்மாண்டமான பாடலைக் காட்சிப்படுத்த தொடங்கியுள்ளது. பிரபல நடன அமைப்பாளர் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த இந்த மாஸ் பாடல், மிகப்பெரிய அளவில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் படமாக்கப்படுகிறது. ராம் சரண் தனது தனித்துவமான கவர்ச்சி மற்றும் ஆற்றல்மிகு நடன அசைவுகளால் ரசிகர்களை கவர, இந்தப் பாடல் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும், ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டமாகவும் அமைய உள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகத்தில் இருந்தாலும், “பெத்தி” குழுவினர் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.

இந்தப் படத்தில் முன்னணி கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும் ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து ஷர்மா முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் ஆர். ரத்தினவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

பெத்தி 2026 மார்ச் 27 அன்று பான்-இந்திய ரிலீசாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மிகுந்த பெருமையுடன், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்க, விருத்தி சினிமாஸ், மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this