HomeCinemaதமிழ்த் திரையுலகில் பிரமாண்டமாகக் களமிறங்கும் PRK Productions தயாரிப்பு நிறுவனம்!

தமிழ்த் திரையுலகில் பிரமாண்டமாகக் களமிறங்கும் PRK Productions தயாரிப்பு நிறுவனம்!

Published on

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ராஜ்குமார் PRK Productions எனும் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

இந்த நிறுவனம் வித்தியாசமான கதைக்களத்தில், நேர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் பல புதுமையான படைப்புகளை வழங்கும், நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் துவங்கிய இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு தியாகராஜன், திருமதி செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் திரு ஆர் கே செல்வமணி, பெப்சி சங்கத்தின் செயலாளர் திரு சுவாமிநாதன், பெப்சி சங்கத்தின் துணைத்தலைவர் திரு மோகன மகேந்திரன் மற்றும் மாமன் படத் தயாரிப்பாளர் திரு குமார், நடிகர் திரு யோகிபாபு, இயக்குநர் திரு சுசீந்திரன், ராட்சசன் பட இயக்குனர் திரு இராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

முனியாண்டி விலாஸ் உணவகங்களின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான தெய்வத்திரு பாண்டியராஜ் அவர்களின் மகன் தான் திரு. ராஜ்குமார். பள்ளி வயது முதலே தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்க வேண்டும் என்ற கனவில் இயங்கி வந்த திரு ராஜ்குமார், தான் பத்தாவது படிக்கும் பொது, “PRK Productions” எனும் பெயரை உருவாக்கி வைத்துள்ளார். அதை நோக்கிய கனவில், இன்ஞ்சினியரிங் படிப்பிற்குப் பிறகு, தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில், திரு தியாகராஜன் அவர்களின் ஆசியுடன், தயாரிப்பு மேற்பார்வையாளராக 15 வருடம் பணியாற்றியுள்ளார். தயாரிப்பு நிறுவனத்தின் நுணுக்கங்களை முழுமையாகக் கற்றுக்கொண்டவர், தற்போது புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.

இந்நிறுவனத்தின் முதல் படைப்பு, முன்னணி நட்சத்திர நடிகரின் நடிப்பில், முன்னணி இயக்குநர் இயக்கத்தில், தமிழின் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில், மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ளது. இந்த படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில்…

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this