HomeCinemaஅமேசான் ஓடிடி'யில் மம்முட்டியின் ‘பலுங்கு.’ 17 வருடங்களை நிறைவு செய்தபின்னும் ரசிகர்களிடம் அதிர்வலை.

அமேசான் ஓடிடி’யில் மம்முட்டியின் ‘பலுங்கு.’ 17 வருடங்களை நிறைவு செய்தபின்னும் ரசிகர்களிடம் அதிர்வலை.

Published on

மம்முட்டி நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான ’பலுங்கு’ திரைப்படம் 17 வருடங்கள் நிறைவு செய்திருக்கிறது என தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸ்ஸி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

இப்படம், நுகர்வோர்களை ஈர்ப்பதற்கான உத்திகளையும், இந்த நகர வாழ்க்கை எப்படி ஒரு சாதாரண விவசாயியின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதையும் விளக்குகிறது. மக்களின் உண்மையான வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்தத் திரைப்படம் கட்டாயம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் பலருக்கும் பரிந்துரைக்கப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.

இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் மம்முட்டி சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதை வென்றார் மற்றும் மோனிசென் பாத்திரத்திற்காக தேசிய விருதுக்கான பரிந்துரையிலும் இந்தப்படம் இடம்பெற்றிருந்தது.

படத்தின் ஆழமான தாக்கம் மற்றும் கதைக்கான உத்வேகம் பற்றி இயக்குநர் பிளெஸ்ஸி பேசியதாவது, “பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு கொட்டாரக்கரையில், ஒரு கடையின் முன்பு இரண்டரை வயது குழந்தை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது. என் மனதை பாதித்த இந்த சோகமே ‘பலுங்கு’ திரைப்படத்திற்கான உத்வேகமாக அமைந்தது.

இது போன்ற கொடுமைகளுக்கு எதிரான மோனிசெனின் கிளர்ச்சி மற்றும் அழுகைக்கு இப்போது பதினேழு வயது. துரதிர்ஷ்டவசமாக இன்றும், இந்த மாதிரியான சம்பவங்கள் அன்றாடம் தொடர்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் அழுகைகள் இழப்பையும் வலியையும் மட்டுமே எதிரொலிக்கின்றன” என்றார்.

இயக்குநர் பிளெஸ்ஸியின் இயக்கத்தில் அடுத்து, பிரித்விராஜ் சுகுமாறன் நடிப்பில் ‘தி கோட் லைஃப்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 10, 2024 அன்று வெளியாக இருக்கிறது.

‘பலுங்கு’ திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

Latest articles

அண்ணன் இளையராஜா அவர்களுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது தம்பியாய் எனக்கு மகிழ்ச்சி! -நடிகர் ராமராஜன் 

நடிகர் ராமராஜன் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... இசைக்கெனவே தன்னை அர்ப்பணித்த இசையின் இசை, நம் இசைஞானி என் அண்ணனின் 50 ஆண்டு...

‘இறைவி’யைவிட உணர்வுபூர்வமான கதை! -‘டோரதி’ குறித்து ப்ரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேச்சு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில்...

‘ஆர்எக்ஸ் 100’ கார்த்திகேயா கும்மகொண்டாவின் புதிய திரைப்படம் ‘கம்பேக்.’

‘ஆர்எக்ஸ் 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா தனது புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்....

தி கிராண்ட் மாஸ்டர் சினிமா விமர்சனம்

இந்த காலத்திலும் நம்மூரில் சாதிப் பாகுபாடு தொடர்கிறது என்பதை சுட்டிக் காட்டும் படங்களின் வரிசையில் 'தி கிராண்ட் மாஸ்டர்.' சாதிக்...

More like this