HomeCinemaசமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, ராசய்யா கண்ணன் தயாரிக்கும் ‘பைலா' படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, ராசய்யா கண்ணன் தயாரிக்கும் ‘பைலா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

Published on

’ராசய்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் ராசய்யா கண்ணன், ’கதையல்ல நிஜம்’ திரைப்படத்தை தொடர்ந்து தனது கலா தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கதையின் நாயகனாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். தம்பியாக ராஜ்குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக இலங்கையைச் சேர்ந்த பிரபல நட்சத்திர நடிகை மிச்சலா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, விஜய் டிவி ஆண்ட்ரூ, என்.இளங்கோ உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு இராமேஸ்வரம், உத்திரகோச மங்கை அம்மன் கோவில், வழி விடு முருகன் கோவில்களில் தொடங்கி, தற்போது இராமேஸ்வரம், இலங்கை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

படம் நீல்கிரிஸ் முருகன் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நீலகிரி முருகன் மற்றும் கே.ஆர்.எம் மூவிஸ் நிறுவனம் சார்பில் கே.ஆர்.முருகானந்தம் இணை தயாரிப்பில் உருவாகிறது.

’சேஸிங்’ படத்தை இயக்கிய K.வீரக்குமார் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளர் ராசய்யா கண்ணன் திரைக்கதை எழுத, ’அழகிய தீயே’, ‘மொழி’, ’36 வயதினிலே’, ‘கோட்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் இயக்குநர் விஜி வசனம் எழுதியுள்ளார்.

”அய்யோ சாமி..” ஆல்பம் பாடல் புகழ் இலங்கை இசையமைப்பாளர் சனுகா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை இலங்கை புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்வின் எழுதியிருக்கிறார்.

பாலுமகேந்திரா, ரத்தினவேல், ஆர்த்தர் ஏ.வில்சன் ஆகியோரிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஏ.எஸ்.செந்தில்குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் தென்னரசு கலை இயக்குநராக பணியாற்ற, திலீப் சுப்புராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தினேஷ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார் நிர்வாக தயாரிப்பாளர் சுகிந்தன் சக்திவேல் கவனிக்க தயாரிப்பு மேற்பார்வை கோகுல்நாத் பணியாற்றுகிறார்.

 

 

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....