HomeCinema திரையுலகில் 32 துறைகளைக் கையாண்ட சாதனைப் பெண்மணி லாவண்யாவின் பேய் கொட்டு படவிழாவில் இயக்குநர் பேரரசு,...

 திரையுலகில் 32 துறைகளைக் கையாண்ட சாதனைப் பெண்மணி லாவண்யாவின் பேய் கொட்டு படவிழாவில் இயக்குநர் பேரரசு, நடிகர் கூல் சுரேஷ் பங்கேற்று உற்காகம்!

Published on

இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகையும் பாடகியுமான லாவண்யா கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பேய் கொட்டு’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடந்தது.

இயக்குநர் பேரரசு, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அறிமுக இயக்குநர் எஸ் லாவண்யா இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் கொட்டு எனும் திரைப்படத்தில் எஸ். லாவண்யா, தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப பணிகளையும் இயக்குநர் எஸ். லாவண்யா சுயமாக கற்றுக்கொண்டு கையாண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த பெண் படைப்பாளி புதிய சாதனையை படைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓம் சாய் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் எஸ் லாவண்யா தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படம் பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது என்பதும், ஒரு பெண்மணி திரைத்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் பற்றி கற்று தேர்ச்சி அடைந்து அதனை தொடர்ந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் நாயும் பேயும் முக்கிய கதாபாத்திரத்தில் நல்லதொரு காம்பினேஷனில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இப்படம் காமெடி ஹாரர் கலந்த கதையிது.நல்ல மெசேஜ் உள்ள விறுவிறுப்பான குடும்பத்தோடு பார்க்கும் படமாக அமைந்துள்ளது.

பாக்யராஜ் சாரிடம் இயக்குனர் லாவண்யா இப்படத்திற்காக விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் சினிமா நடிகர் நடிகைகளின் பெண்கள்னா அட்ஜஸ்மென்ட் ஆண்கள்னா இன்வெஸ்ட்மென்ட் என விவகாரமான விஷயத்தை படம் மையக்கருவாக கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் டீஸர், டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 21-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this