HomeCinemaஇசைத்துறை பிரபலங்களின் பங்கேற்போடு உற்சாகமாக நடந்த கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி...

இசைத்துறை பிரபலங்களின் பங்கேற்போடு உற்சாகமாக நடந்த கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்கம்!

Published on

கிரியா லா மார்ச் 1, 2025 அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் அரை நாள் நிகழ்வை ஏற்பாடு செய்தது. வரவிருக்கும் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னோடியாக இந்த நிகழ்வு சர்வதேச டிரேட்மார்க் சங்கத்தால் நடத்தப்பட்டது. இது மே 17 முதல் மே 21, 2025 வரை கலிபோர்னியாவின் சான் டியாகோவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இசைத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர். டர்ன்கே மியூசிக் மற்றும் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அதுல் சுரமணி மற்றும் சரிகம இந்தியா லிமிடெட் முன்னாள் துணைத் தலைவர் சஞ்சய் வாத்வா, ஏபி இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் ஜெ, தென்னிந்திய இசைக் கம்பெனிகள் சங்கத்தின் (SIMCA) செயலாளர் சுவாமிநாதன், தேசிய விருது பெற்ற கிளாசிக்கல் பியானோ கலைஞர் மற்றும் தொழில்முனைவோர் அனில் ஸ்ரீனிவாசன், இந்தியன் பெர்ஃபார்மிங் ரைட் சொசைட்டியின் (IPRS) சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ரும்பா பானர்ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி (TFAPA) தனஞ்செயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்திய இசையமைப்பாளர்கள் சங்கத்தின் கௌரவ பொருளாளர் விபின் மிஸ்ரா. திங்க் மியூசிக் துணைத் தலைவர் சந்தோஷ் குமார், ஃபீவர் எப்.எம், ரேடியோ ஒன் நெட்வொர்கின் ஸ்டேஷன் மற்றும் விற்பனைத் தலைவர் பாலசுப்ரமணியன் பரசுராமன், விருது பெற்ற பின்னணிப் பாடகரும், இந்திய பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் உரிமைகள் சங்கத்தின் முன்னாள் இயக்குநருமான ஹரிசரன், இந்திய பின்னணிப் பாடகர் சுமேஷ் நாராயணன், விருது பெற்ற பன்முக தாள வாத்தியக் கலைஞர் ஆகியோரும் உள்ளனர்.

குழு உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவாதத்தில் சுயாதீன கலைஞர்கள், லேபிள்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் உரிமைகள், இசை அமைப்புகள் மற்றும் சமூகங்களின் பங்கு, திரைப்படம் மற்றும் வணிக இசையில் AI இன் செல்வாக்கு மற்றும் சமநிலை உரிமங்களின் சிக்கல்கள் குறித்த தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

தேசிய விருது பெற்ற பியானோ கலைஞர் அனில் சீனிவாசன் மற்றும் விருது பெற்ற பல தாள வாத்தியக் கலைஞர் சுமேஷ் நாராயணன் ஆகியோர் தங்கள் பிரமாண்ட இசையால் நிகழ்வை அலங்கரித்தனர்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this