HomeUncategorizedகதிர், மியாஸ்ரீ நடிப்பில் விவசாயத்தின் பெருமையையும், உறவுகளின் ஆழத்தையும் பேசும் 'பூர்வீகம்' விரைவில் ரிலீஸ்!

கதிர், மியாஸ்ரீ நடிப்பில் விவசாயத்தின் பெருமையையும், உறவுகளின் ஆழத்தையும் பேசும் ‘பூர்வீகம்’ விரைவில் ரிலீஸ்!

Published on

கதிர், மியாஶ்ரீ நடிப்பில், ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில், பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி டாக்டர் ஆர் முருகானந்த்  தயாரிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் விதமாக உருவாகியுள்ள படம் ‘பூர்வீகம்.’

நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவசாயம் .இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு இடம்பெயர்ந்து படிப்பிற்காகவும் தொழிலுக்காகவும் முழுமையாக இடம்பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.  நகரத்திற்கு இடம்பெயரும் இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும், அப்படியே உதறி  தள்ளிவிட்ட  விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் விதமாக இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

படத்தின் பணிகள் முடிந்த நிலையில், திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் டாக்டர் முருகானந்த், ”இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடும். ஆகவே தனி மனிதனோ அரசாங்கமோ விவசாய நிலத்தை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும் மேலும் படித்தவனோ பாமரனோ அரசனோ ஆண்டியோ யாராக இருந்தாலும் அவன் வாரத்தில் ஒரு நாளாவது விவசாயத்தில் ஈடுபடவேண்டும். இப்படி ஒவ்வொருவரும் விவசாயத்தில் ஈடுபட்டால் வளம் பெருகும். வாழ்வும் சிறக்கும். இதைத்தான் இந்த படத்தில் வெகு ஆழமாக சொல்லியிருக்கிறோம்” என்றார்.

படத்தில் போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, ஒய் எஸ் டி சேகர், சூசன், ஶ்ரீ ரஞ்சனி, ஷாஸ்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு மாயவரம், தஞ்சாவூர், அரியலூர் , சென்னை மற்றும் திருவள்ளூர் அதனைச்  சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டை மிக வித்தியாசமான மண்ணின் மைந்தர்களாம விவசாயிகளை வைத்து, படக்குழுவினர் வெளியிட்டனர்.

படக்குழு:-
தயாரிப்பு – பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி டாக்டர் ஆர் முருகானந்த்
எழுத்து, இயக்கம் – ஜி கிருஷ்ணன் ஒளிப்பதிவு – விஜய் மோகன்
இசை – சாணக்யா
படத்தொகுப்பு – சங்கர் கே
பாடலாசிரியர் – ஏகாதசி
கலை இயக்கம் – செல்லம் ஜெயசீலன்
பாடகர்கள் – சாய் விக்னேஷ், மது ஐயர், கே.பார்த்திபன், ஜி.அமிர்தவர்ஷினி, டாக்டர் ஆர் முருகானந்த்
நிர்வாக தயாரிப்பாளர் – கே .சந்தோஷ்
மக்கள் தொடர்பு – Vistas Media செல்வரகு

Latest articles

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் டீசர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=EFI-xLTY9yU   டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி...

More like this