HomeCinemaபுகாரளித்த பெண்ணின் FIR எப்படி வெளியே வந்தது? அந்த ' SIR' யார்? -பா ஜ...

புகாரளித்த பெண்ணின் FIR எப்படி வெளியே வந்தது? அந்த ‘ SIR’ யார்? -பா ஜ க அண்ணாமலையின் சாட்டையடி போராட்டத்தை முன்வைத்து இயக்குநர் பேரரசு கேள்வி

Published on

மனிதத்தை முன்னே வைப்போம்!
அரசியலை பின்னே வைப்போம்!!
இயக்குநர் பேரரசு அறிக்கை…

இன்று சாட்டையடி போராட்டத்தை
கிண்டலடிக்கும் பல நூறு வாய்களில்
ஒரு வாய் கூட
அண்ணா பல்கலைக்கழகத்தில் சீரழிக்கப்பட்ட பெண்ணிற்காக ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத வாய்கள்தான் இவைகள்!
கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவான இந்தப் போராட்டம் இவர்களுக்கு நகைச்சுவையாகவும், கிண்டலாகவும் தெரிகிறது என்றால் இவர்கள் எப்படிப்பட்ட மனநிலையில் வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை?
காம குற்றவாளிக்கு எதிரான போராட்டத்தை கிண்டல் செய்வது அவனவன் அவன் முகத்தில் செருப்பால் அடித்துக் கொள்வதற்கு சமம்!
இதுவே இவர்களின் சகோதரியை ஒருவன் சீரழித்து, சீரழித்தவன் தன் கட்சிகாரனாக இருந்தால் அவனுக்கு இந்த குரல்கள் ஆதரவாக இருக்குமா?
வன்மத்தை கக்கும்
வாடகைக்கு கத்தும்
இந்த வாய்கள் இப்படி கிண்டலடிக்குமா?
பாலியல் குற்றம் செய்தவன் எந்தக் கட்சிக்காரனாக இருந்தாலும் அவன் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி!
கட்சிப் பார்த்து கண்டிப்பது மனிதகுணத்துக்கு முரணானது.
போராட்டம் எப்படிப்பட்டது என்பது முக்கியமல்ல, எதற்காக இந்த போராட்டம் என்பது தான் முக்கியம்!
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல்
புகாரளித்த பெண்ணின் FIR எப்படி வெளியே வந்தது?
அந்த ‘ SIR’ யார்?
இதற்கு விடை தெரியும் வரை கேள்விக்குறள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்!
இந்த மாதிரி விவகாரங்களில் உடனே வேட்டியை மடித்துக்கொண்டு செல்லும் சில பத்திரிக்கையாளர்களின் குரல் எங்கே?
திரைப்படத்தில் பெண்களை சிறுமைப்படுத்தினால் உடனே வெகுண்டு எழும் மாதர் சங்கம் எங்கே?
எம் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு என்று கூறும் சில அரசியல் கட்சி தலைவர்களின் குரல் எங்கே?
‘மனிதத்தை முன்னே வைப்போம்!
அரசியலை பின்னே வைப்போம்’!

Latest articles

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் டீசர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=EFI-xLTY9yU   டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி...

நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – ஜி கே எம் தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை!

‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026  விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத்...

More like this