HomeGeneralஇயக்குநர் சுசி கணேசனின் பிறந்தநாளில் நிறைவு பெற்ற 'ஒரண்ட' படப்பிடிப்பு... பிரியாணியோடு விருந்தோடு உற்சாகம்!

இயக்குநர் சுசி கணேசனின் பிறந்தநாளில் நிறைவு பெற்ற ‘ஒரண்ட’ படப்பிடிப்பு… பிரியாணியோடு விருந்தோடு உற்சாகம்!

Published on

தனது அடுத்த படைப்பின் பெயர் ‘ஒரண்ட’ என்று சமீபத்தில் அறிவித்த இயக்குநர் சுசி கணேசன், அவர் பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 25) படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், “சினிமா பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சில சமயங்களில் வித்தியாசமாக அமைந்து விடும். அந்த வகையில், இத்தனை படங்களில் ‘ஒரண்ட’ மட்டுமே என் பிறந்தநாளில் முடிந்திருக்கிறது. அதுவும் இரட்டை கொண்டாட்டமாக பிறந்தநாளோடு சேர்த்து படப்பிடிப்பின் நிறைவு நாளையும் படக்குழுவினரோடு பிரியாணி விருந்து சமைத்து கொண்டாடியது நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும்” என்றார்.
மிகுந்த பொருட்செலவில் உருவாகியிருக்கும் ‘ஒரண்ட’ படத்தின் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இன்னும் ரகசியமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர், நடிகைகள் யார்… தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்… முதல் பார்வை எப்போது… டீசர் எப்போது… என எந்த விவரத்தையும் வெளியிடாமல், ‘ஒரண்ட’ என்ற தலைப்பால் மட்டுமே தனது அடுத்த படத்தை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே பேசுபொருளாக சமீபத்தில் மாற்றினார் இயக்குநர் சுசி கணேசன்.
கதை குறித்தோ, கதாபாத்திரங்கள் குறித்தோ எந்தத் தகவலையும் வெளியிடாத நிலையில், அன்றாட பேச்சுவழக்கில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு வட்டாரச் சொல்லை திரைப்படத் தலைப்பாக மாற்றியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this