HomeCinemaவிஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி'யில் முத்தக்காட்சி!

விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’யில் முத்தக்காட்சி!

Published on

நடிகர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஓஹோ எந்தன் பேபி.’ கதாநாயகியாக நடிகை மிதிலா பால்கர் நடிக்கிறார்.

இந்த படத்தில் உதவி இயக்குநராக நடித்துள்ள ருத்ரா, எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலரிடமும் கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையைச் சொல்ல, அவர் ‘ரொமான்ஸ் கதை இல்லையா? என கேட்கிறார்.

இப்படி பயணிக்கும் கதையில் ருத்ரா இயக்குநர் ஆனாரா இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

ரொமான்ஸ், ஹியூமர், எமோஷனல் என அனைத்தும் கலந்து படத்தை இயக்குகிறார் கிருஷ்ணகுமார் ராமகுமார்.

நிஜத்திலும் ருத்ரா ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இதற்கு முன்பு பணிபுரிந்தார். மேலும், எஃப் ஐ ஆர், கட்டா குஸ்தி ஆகிய படங்களில் போஸ்ட் புரொடக்சன் பணிகளையும் மேற்கொண்டார்.

கதாநாயகனாக அறிமுகமாவது பற்றி ருத்ராவிடம் கேட்டபோது, “கேமராவுக்கு பின்னாலும் முன்னாலும் பணிபுரிவது சவாலானது. அதை நல்லபடியாக செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

நடிகர் விஷ்ணு விஷாலிடம் பேசியபோது, ” இந்தக் கதையில் எல்லா அம்சங்களும் சரியாக உள்ளது. இருந்தாலும் இந்தக் கதைக்கு நான் பொருத்தமானவன் இல்லை என்பதை உணர்ந்து உடனே ருத்ராவை நடிக்க வைத்தேன். நான் தயாரிப்பாளராக இருந்து அவரை அறிமுகப்படுத்துவது ஸ்பெஷலான தருணம். நடிகர் சூர்யா சார் தயாரிப்பில் எப்படி கார்த்தி சாருக்கு ஆதரவு கொடுக்கிறாரோ, அப்படி இனிவரும் காலத்தில் ருத்ரா நடிக்கும் படங்களுக்கு ஆதரவு கொடுக்க இருக்கிறேன். நானும் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். இந்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் எனக்கு அமையவில்லை. ஆனால் என் தம்பிக்கு முதல் படத்திலேயே முத்த காட்சி அமைந்து விட்டது” என்றார்.

250-க்கும் மேற்பட்ட கமர்ஷியல் வீடியோ மற்றும் ஃபிலிம்மேக்கர் ராஜீவ் மேனனிடம் பல ஃபீச்சர் படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார். “விளம்பரங்களில் 30 செகண்ட்டில் பார்வையாளர்களைக் என்கேஜ் செய்ய வேண்டும். ஆனால், சினிமாவில் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக பார்வையாளர்களைக் கட்டிப் போட வேண்டும் என்பது சவால். அதை சிறப்பாக செய்திருக்கிறோம்” என்றார்.

இந்தப் படத்தின் டைட்டில் ஐகானிக் பாடலான ‘ஓஹோ எந்தன் பேபி’ பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்தப் பாடலுக்கு மரியாதை செய்யும் விதமாக அதன் கிளிம்ப்ஸ் இடம்பெற்றுள்ளது!

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this