HomeMovie Reviewநான் வேற மாதிரி சினிமா விமர்சனம்

நான் வேற மாதிரி சினிமா விமர்சனம்

Published on

என்ன நடந்தது என்பதை சரியாகப் புரிந்து கொள்வதற்குள்ளேயே அடுத்து என்ன நடக்கும் என அடுத்தடுத்த காட்சிகள் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம்.

பாட்டி, அண்ணன், தம்பி, தங்கை, அண்ணி என உறவுகள் சூழ்ந்திருக்கும் கூட்டுக் குடும்பம். அதில் ஒவ்வொருவராக உயிரிழக்கிறார்கள். அந்த இழப்புகளுக்கு பின் திட்டமிட்ட சதி இருக்கிறது என தெரிகிறது. அந்த சதித்திட்டத்தை செயல்படுத்தியது யார், காரணம் என்ன என்பதையெல்லாம் கண்டறியவும் அந்த குடும்பத்தில் மிச்சருக்கும் இளம்பெண் நிஷாவை (ஜோதிஷா) காப்பாற்றவும் போலீஸ் களமிறங்குகிறது…

பாட்டியை இழப்பை கலங்குவது, அண்ணனை பறிகொடுத்து அதிர்வது, அண்ணியின் மரணம் கண்டு மிரள்வது, திகில் சம்பவங்கள் அரங்கேறும்போது பதறுவது என முகபாவங்களில் வித்தியாசம் காட்டியிருக்கும் ஜோதிஷா, ரொமான்ஸிலும் அசத்துகிறார்; பாடலில் கவர்ச்சியும் காட்டுகிறார்.

கதாநாயகன் ஷா கதாநாயகியைக் காதலிக்கும் காட்சிகளில் சுறுசுறுப்பாகவும் மனதில் தேங்கியிருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும்போது பரபரப்பாகவும் நடந்துகொண்டிருக்கிறார். பெரிதாய் தாக்கம் தராத பங்களிப்பென்றாலும் கதாபாத்திரத்தின் தேவைக்கு போதுமானதாகவே இருக்கிறது.

காவல்துறை உயரதிகாரியாக வருகிற நஷீர் பாஷா கம்பீரம் குறையாமல் நிதானம் தவறாமல் நடந்து தன்னைக் கவனிக்க வைக்கிறார்.

சித்தா பட வில்லன் தர்ஷனிலிருந்து மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறவர்களின் நடிப்பு கதையோட்டத்தின் தேவையை நிறைவு செய்திருக்கிறது. டிக்டாக் இலக்கியா வேறொரு நபர் போன்ற தோற்றத்தில் வந்து போகிறார்.

ஜி ஜெயபாலன் பட்ஜெட்டில் அடங்குகிற நேர்த்தியான ஒளிப்பதிவை தந்திருக்க, பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்க்க முயற்சித்திருக்கும் மா சிவசங்கர், பாடல்களில் உற்சாகத்தை நிரப்பியிருக்கிறார்.

படத்தின் கதைக்களம் பார்த்துப் பழகிய ரிவென்ஜ் அட்டம்ட்தான் என்றாலும், இயக்குநர் எஸ் ஜவஹர்லாலின் திரைக்கதையிலிருக்கும் சிலபல திருப்பங்கள் ஆடியன்ஸுக்கு சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் அனுபவத்தைக் கொடுக்கும்.

Latest articles

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

More like this