HomeCinemaஅசத்தலான வடிவமைப்பில் 'நாக பந்தம்' படத்திற்கான பிரமாண்டமான அரங்கம்!

அசத்தலான வடிவமைப்பில் ‘நாக பந்தம்’ படத்திற்கான பிரமாண்டமான அரங்கம்!

Published on

இளம் ஹீரோ விராட் கர்ணா, இந்த பான் இந்திய திரைப்படமான நாகபந்தத்தில் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார்.

படத்தின் முன்னோட்டம், அதைத் தொடர்ந்து வந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விராட் கர்ணா இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளார். அதிரடி அவதாரத்தில் தோன்றிய அவரது ஜிம் படங்கள் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகின்றது.

படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது, தயாரிப்பாளர்கள் ஒரு முக்கியமான காட்சியையும் ஒரு பாடலையும் பிரமாண்டமான அரங்கில் படமாக்கி வருகின்றனர்.

அனந்த பத்மநாப சுவாமி கோயிலின் மிக பிரம்மாண்டமான செட்டை, கலை இயக்குநர் அசோக் குமார் இந்த பாடலுக்காக வடிவமைத்துள்ளார். வியக்கத்தக்க வகையில் சிறு சிறு கூர்மையான விவரங்களில், கவனம் செலுத்தி கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம், குழுவினரையும், ஊடகங்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலர் இதை கேரளாவில் உள்ள அசல் கோயிலின் அட்டகாசமான மறு உருவாக்கம் என்று பாராட்டி வருகின்றனர்.

பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், விராட் கர்ணாவுடன் இணைந்து 1000 நடனக் கலைஞர்கள் இணைந்து நடனமாடும் இந்தப் பாடல், பண்டைய அழகியல், நவீன திரைப்பட உருவாக்கம் மற்றும் அட்டகாசமான நடன அமைப்பு என பல ஆண்டுகளாக நினைவில் இருக்கும் ஒரு காட்சி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாக பந்தம் படத்தில் வரும் இந்த ஒரு எபிசோடிற்காக 10 கோடி ரூபாய் பட்ஜெட் செலவிடப்பட்டுள்ளது. மக்கள் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் ஒரு அற்புதமான அனுபவமாக இப்படத்தை உருவாக்குவதற்காகவும், அகில இந்திய காவியங்களுக்கு இணையான பிரமாண்டத்தை வழங்கவும் தயாரிப்பாளர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

‘நாகபந்தம்’ படத்தில் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜகந்நாதர் கோயில்களில் மறைந்துள்ள, பொக்கிஷங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின் உத்வேகத்தில், ஆன்மீக மற்றும் சாகசக் கருப்பொருள்களுடன், ஒரு அழுத்தமான ஸ்கிரிப்டை அபிஷேக் நாமா எழுதியுள்ளார். நாகபந்தம் இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோயில்களைச் சுற்றியுள்ள வரலாற்று மர்மத்தை ஆராய்கிறது, இந்த புனித தலங்களைப் பாதுகாக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாகக் கொண்டு, நவீன வடிவில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசையமைக்கிறார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

படம் 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.

அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கிஷோர் அன்னபுரெட்டி இப்படத்தை தயாரிக்கிறார். லட்சுமி இரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் இப்படத்தை வழங்குகிறார்கள்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...