HomeCinemaதேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'நிழற்குடை' ரிலீஸுக்கு தயாராகிறது!

தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘நிழற்குடை’ ரிலீஸுக்கு தயாராகிறது!

Published on

தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,  சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் ‘நிழற்குடை.’

படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

தர்ஷன் பிலிம்ஸ் ஜோதி சிவா தயாரிக்கும் இந்த படம் இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில், எதிர்பாராத திருப்பங்களுடன், மர்ம முடிச்சுகளுடன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்ததையடுத்து, பட ரீலீஸுக்கான பணிகள் நடந்து வருகிறது. படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

படக்குழு:-
இசை: நரேன் பாலகுமார்
ஒளிப்பதிவு:ஆர்.பி குருதேவ்
கலை இயக்குநர்: விஜய் ஆனந்த்
படத்தொகுப்பு: ரோலக்ஸ்
மக்கள் தொடர்பு: ஏ.ஜான்

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this