HomeMovie Reviewமிலாதுன் நபி ஆவணப்பட விமர்சனம்

மிலாதுன் நபி ஆவணப்பட விமர்சனம்

Published on

இஸ்லாமிய இறைவன் அல்லாவின் தூதரான நபிகள் நாயகம் பூமியில் இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்பி, இஸ்லாமிய மக்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதித்து, அவர்களுக்கு எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து, எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதைக் கற்பித்தவர். அவரது வாழ்க்கை வரலாறு இரண்டு மணி நேர ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறது.

நபி தனது 6-வது வயதிலேயே பெற்றோரை இழந்திருக்கிறார்; அரவணைத்து வளர்த்த தாத்தாவும் அடுத்த ஒரு சில ஆண்டுகளிலேயே காலமாகியிருக்கிறார். அவர் வசித்து வந்த மெக்காவில் குரேஷிய இனத்தவர்களால் பல ஆண்டுகாலம் பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறார். அல்லாவின் அருளால் மிராஜ் எனப்படும் வானுலகப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். தன் வயதுக்கு பொருத்தமில்லாத 11 பெண்களை திருமணங்கள் செய்திருக்கிறார். மகன், மகள் என வாரிசுகளைப் பெற்றெடுத்திருக்கிறார். வாழ்வதில் போராட்டங்களைச் சந்தித்தவர் இஸ்லாமிய மக்களுக்கெதிரான முதல் போரையும் எதிர் கொண்டிருக்கிறார். 63-வது வயதில் உயிர் நீத்து அல்லாவிடம் சென்று சேர்ந்திருக்கிறார். அல்லாவுக்கு அடுத்த இடத்தில் வைத்து இஸ்லாமிய மக்களால் வணங்கப்படுகிறார்.

அத்தனை சம்பவங்களையும் தொகுத்திருக்கும் இந்த படத்தின் இயக்குநர் மில்லத் அஹமது, அவற்றை மூன்று இமாம்களின் மூலம் எளிமையான தமிழில் எடுத்துச் சொல்ல வைத்து வீடியோ பதிவாக்கியிருக்கிறார். அவர்கள் சொல்வதற்கேற்ப சம்பவங்களை ஏ ஐ மூலம் உருவாக்கி காட்சிகளாக பரிமாறியிருக்கிறார். பத்து பாடல்களை எழுதி அவற்றின் மூலமும் நபிகள் பற்றி விவரித்திருக்கிறார்.

நபிகள் பற்றி விவரிக்கிற அப்துல் கையூம், உமர், சதக்கத்துல்லா என்ற மூன்று இமாம்களின் தெளிவான உச்சரிப்பு படத்தின் பலம் என்றால்,

நபி பெருமானின் வரலாற்றை பாடல்களாக நாகூர் ஹனிபாவின் மகன் நெளஷாத், பாடகர் சாகுல் ஹமீதின் தம்பி சம்சுதீன், யூடியூபர் ரஹீமா, விஜய் டிவி சூப்பர் சிங்கர் பரிதா உள்ளிட்டோர் இதம் தரும் குரலில் இணைத்துப் பிணைத்திருப்பது பலத்தை இரட்டிப்பாக்குகிறது. பாடல்களுக்கு தன்னால் இயன்றளவு இசையால் உயிருட்டியிருக்கிறார் எச் ஆர் ராம். இயக்குநரின் முந்தைய ஆந்தை படத்துக்கும் எச் ஆர் ராம்தான் இசையமைத்திருக்கிறார்.

நாகூர் ஹனிபாவின் மகன் நெளஷாத், பாடகர் சாகுல் ஹமீதின் தம்பி சம்சுதீன், யூடியூபர் ரஹீமா, விஜய் டிவி சூப்பர் சிங்கர் பரிதா என பாடல்களைப் பாடியிருப்பவர்களும் புகழ் வாய்ந்தவர்கள்தான்.

படத்தை இயக்கியிருக்கும் அஹமது மில்லத்தே கதையின் சம்பவங்களில் இடம்பெறும் நபர்களை, மனிதர்களை, ஒட்டகங்களை என எல்லாவற்றையும் ஏ ஐ மூலம் கச்சிதமாக உருவாக்கியிருக்கிறார். பாடலொன்றிலும் வந்து போகிறார்.

இறைவனின் தூதராக பூமியில் வலம்வந்தவர் அந்த மதத்தினர் மனதில் இறைவனைப் போல் இடம் பிடித்திருக்கிறார் என்பதே சிலிர்ப்பூட்டத்தான் செய்கிறது.

இஸ்லாமியர்களுக்கு திரைப்படம் போல் உருவாகியிருக்கிற இந்த ஆவணப்படம் கிட்டத்தட்ட பொக்கிஷம். மற்ற மதத்தினரை கேலி கிண்டல் செய்கிற எதுவும் படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தி. அதனால் எந்த மதத்தினரும் விரும்பினால் பார்க்கலாம்.

Rating 3.5 / 5 

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this