HomeCinemaமாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் மல்லர் கம்ப கலையை ஊக்குவிக்க ஸ்கூட்டியும் வீடும் வழங்கப்போகும் நடிகர் ராகவா...

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் மல்லர் கம்ப கலையை ஊக்குவிக்க ஸ்கூட்டியும் வீடும் வழங்கப்போகும் நடிகர் ராகவா லாரன்ஸ்!

Published on

மல்லர் கம்பம் என்ற தமிழர்களின் பாரம்பரிய சாகச கலை, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸின் ‘கை கொடுக்கும் கை’ மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத் திறனாளிகளும் மல்லர் கம்பம் சாகசக் கலையில் பங்கேற்கின்றனர். அதை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் பத்திரிக்கை சந்திப்பு 15.4.2024 இன்று சென்னையில் நடந்தது. அப்போது மல்லர் கம்பம் கலை நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் சாகசக் கலை பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர்களுக்கு கலையை கற்றுத்தந்த மாஸ்டர் ஆதித்யன் மற்றும் குழுவினரை பாராட்டினார்.

அதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், ”எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளி குழுவினர் தான். எனக்கு எப்போது தளர்வாக இருந்தாலும், இவர்களை ஆட வைத்து பார்த்து ஊக்கம் கொள்வேன். எப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், பாடல்களில் டான்ஸில் இவர்களை ஆட வைப்பேன். சினிமாவில் சில நேரம் ஒரே மாதிரி இருக்கிறதே இவர்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் மாஸ்டர் என்பார்கள், நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே அது போல் நம் படங்களை பார்க்கட்டும் இவர்களையும் பார்க்கட்டும் என்பேன்.

சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன். அப்போது தான் ‘மல்லர் கம்பம்’ என ஒன்று இருக்கிறது அதைக் கற்றுக்கொள்கிறோம் மாஸ்டர் என்றார்கள். இது நல்ல வலுவான உடல் உள்ளவர்கள் செய்வது உங்களால் முடியுமா ? எனக் கேட்டேன், ஆனால் எங்களால் முடியும் என்றார்கள். அதே போல் கற்றுக்கொண்டார்கள், இங்கு அவர்கள் செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இவர்களால் முடியாதது எதுவுமே இல்லை. இவர்களால் எல்லாமே முடியும்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் முக்கிய காரணமே, இதன் மூலம் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான். இவர்கள் வாடகை கட்டக் கூட கஷ்டப்படுகிறார்கள். அதனால் உங்கள் வீட்டு விழா, தெரிந்த நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள். இவர்களை அழைத்து நிகழ்ச்சி செய்யும் அனைவருக்கும் நான் வீடியோவில் வாழ்த்து சொல்வேன். இவர்களுக்காக நான் என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன்.

இந்தக்கலை இவர்களை வாழ வைக்கும். இந்தக்கலையை கற்றுக்கொண்டதற்காக இவர்கள் அனைவருக்கும் நாளை என் வீட்டில் ஸ்கூட்டி வழங்குகிறேன். அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன், அதன் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன். நீங்களும் இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this