HomeCinemaஇயக்குநர்கள் சீமான், சரண், அருண்ராஜா காமராஜ், கல்யாண் துவக்கி வைத்த சனா ஸ்டுடியோஸின் முதல் படம்!...

இயக்குநர்கள் சீமான், சரண், அருண்ராஜா காமராஜ், கல்யாண் துவக்கி வைத்த சனா ஸ்டுடியோஸின் முதல் படம்! மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகிறது.

Published on

‘சனா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சிறப்பான திட்டமிடலுடன் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது. விஜய் நடித்த ‘மாஸ்டர்’, சமீபத்தில் வெளியான ‘லேபிள்’ வெப் சீரிஸ் ஆகியவற்றில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை முதல் படமாக தயாரிக்கிறது.

ஜீவிதா இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சார்லி, கும்கி அஸ்வின் கலக்கப்போவது யாரு’ சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும் இந்த படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக இருக்கிறது.

தற்காலிகமாக ’புரொடக்ஷன் நம்பர் 1′ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை சீமான், சரண், அருண்ராஜா காமராஜ், கல்யாண் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

உருவாக்கத்தில் உறுதுணை:-

முத்து, சந்தோஷ் சிவன் & ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸிடம் இசை ஏற்பாட்டாளராக இருந்த அபிஷேக் ஏஆர் இசையமைக்கிறார். இதற்கு முன்பு அவரது இசையில் உருவான ‘கேம் ஆன்’ ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். அவருடைய ஒளிப்பதிவில் சமீபத்தில் வெளியான ‘தூக்குதுரை’ படம் ஒளிப்பதிவுக்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

‘சிவகுமாரின் சபதம்’, ’ரவுடி பேபி’ படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தீபக்  எடிட்டராக பணிபுரிகிறார்.

Latest articles

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...

ராக்ஸ்டார் DSP vs தேவி ஸ்ரீ பிரசாத்… சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!

https://www.youtube.com/watch?v=2bwUK-NvtSI   ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா - சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி அவரது துள்ளல்...

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

More like this