HomeGeneralமூக்குத்தி அம்மன் 2 சினிமா விமர்சனம்

மூக்குத்தி அம்மன் 2 சினிமா விமர்சனம்

Published on

துஷ்ட சக்திகளை காலில் போட்டு மிதித்து, அரக்கர்களை அழிக்கிற அம்மன். இந்த ஒன்லைனில் ஏகப்பட்ட படங்கள் வந்தாச்சு; பார்த்தாச்சு.

இந்த படத்தில் அம்மனின் சக்தியை மிஞ்சுகிற அசுர சக்திகளின் அணிவகுப்பு கொஞ்சம் அதிகம். அவர்களை அம்மன் எப்படி வேட்டையாடுகிறாள் என்பதே திரைக்கதை… இயக்கம் சுந்தர் சி

அம்மனாக நயன்தாரா. தான் தெய்வம், அம்மன் என்று தெரியாத கான்ஸ்டபிளாக வரும்போது நரபலியை தடுக்கிற விதமே அதிரடிதான். அதன்பிறகு தன்னை உணர்வது, தன் சக்தியை புரிந்துகொள்வது, தன்னை அழிக்கத் துடிப்பவர்களுடைய, உலகையே ஆட்டிப்படைக்கும் சக்தியாக உருவெடுக்க விரும்பும் அரக்கியுடைய சூப்பர் பவரை அழிப்பது வரை நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கிறார்.

ரெஜினா கசான்ட்ராவுக்கு அரக்கி கேரக்டர். கெட்டப்பும் நடிப்பிலிருக்கும் வெறித்தனமும் மிரட்டுகிறது.

அம்மனை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறவர்களாக கன்னட நடிகர் துனியா விஜய், தெலுங்குதேச சுனில், கருடா ராம் கூட்டணி காட்சிகளின் பரபரப்புக்கு உதவுகிறார்கள்.

ஊர்வசி, யோகிபாபு, சிங்கம்புலி, மைனா நந்தினி, சுவாமிநாதன் உள்ளிட்ட சிலர் காமெடி கலாட்டா ஏரியாக்களில் அட்டனன்ஸ் போடுகிறார்கள்.

பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருண்டு புரண்டு கொண்டிருக்க ஹிப் ஹாப் ஆதியின் ஆர்ப்பாட்டமான பின்னணி இசையும், பாடல்களும் சேர்ந்து கொள்ள தியேட்டர் முழுக்க பக்திப் பரவசத்தில் மிதக்கிறது. நயன் – குஷ்பு – சிநேகா இணைந்தாடும் ஆக்ரோஷம் பொங்கும் கிளைமாக்ஸ் பாட்டு நிச்சயமாய் வைப் மெட்டீரியல்.

ஆர்ட் டைரக்ஷன் டிபார்ட்மெண்ட், ஆக்சன் கோரியோகிராபர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அத்தனைப் பேரும் எந்தளவுக்கு கடுமையான உழைத்திருப்பார்கள் என்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் உணர முடிகிறது.

சற்றே வித்தியாசமான கதை, அத்தனைப் பேரின் அசத்தலான நடிப்பு, அனல் பறக்கும் ஆக்சன், சிலிர்ப்பூட்டும் இசை, விறுவிறுப்பு கூட்டும் கிராபிக்ஸ்… பக்திப் படத்தில் வேறென்ன வேண்டும்?

Rating 3.5 / 5 

Latest articles

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

பிரதீப் ஆண்டனி, ஸ்மேஹா மணிமேகலை, சனம் ஷெட்டி மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் புதிய...

சண்முக பாண்டியன் நடிக்கும் வாணவேடிக்கை திரைப்படத்தில் வில்லனாக களமிறங்குகிறார் இயக்குநர் மோகன் ராஜா!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சதீஷ் எம்.பி. தயாரிக்கும் 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் ட்ரெய்லரை இன்று ஆர்யா மற்றும் ஜெயம்...

ஜீ ஸ்குவாட்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், தெலுங்கு- தமிழ் திரையுலகின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி...

பல வருடங்கள் கழித்து இந்த படத்திற்காக நடனம் ஆடியிருக்கிறேன்! -‘சிக்னல் அட் 11:30′ பட விழாவில் நடிகர் சந்தோஷ் பிரதாப் உற்சாகம்

மலர்விழி நடேசன் எழுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30.' இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும்...

More like this