மலர்விழி நடேசன் எழுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30.’
இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இயக்குநர் மலர்விழி நடேசன், “இது என்னுடைய இரண்டாவது படம். நான் ரசித்த படங்களின் இயக்குநர்களான உதயகுமார் சார், பேரரசு சார் என இங்கு வந்திருக்கும் பலரின் படங்களுக்கு நான் ரசிகை. அவர்கள் என் படத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வாழ்த்த வந்திருப்பது கனவு நனவான தருணம். தனஞ்செயன் சாருக்கு படம் பிடித்திருப்பது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தது. படத்திற்கு இசை மிக முக்கியம் என்பது என் எண்ணம். இந்தப் படத்திற்கு இமான் சாரின் இசை மிகப்பெரிய பலம். இந்த படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதற்கு மிகப்பெரிய பங்களிப்பு இமான் சாருக்கு உள்ளது. அவருக்கு நன்றி. சந்தோஷ், புஜிதா, பவ்யா மற்றும் என்னுடைய தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் உங்கள் அனைவரது ஆதரவும் இந்தப் படத்திற்கு தேவை”.
நடிகை பவ்யா, ” எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மலர்விழி மேமுக்கு நன்றி. கடினமாக உழைத்துள்ளார். சந்தோஷ் மற்றும் படக்குழுவினருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இமான் சாரின் இசை அற்புதம். ஜோ ஜோ பாடல் எனக்கு பர்சனலாக கனெக்ட் ஆனது. இது வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம். எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் “.
நடிகர் சந்தோஷ், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த மலர் மேமுக்கு நன்றி. நாங்கள் எல்லோரும் இந்த படத்தின் கிரீடம் என்றால் அதன் மேல் உள்ள வைரம் இசையமைப்பாளர் இமான் சார் தான். அவருடைய பாடலுக்கு நடனமாடி இருப்பது மகிழ்ச்சி. பல வருடங்கள் கழித்து சினிமாவில் ஒரு திரைப்படத்தில் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறேன் என்றால் அது சிக்னல் படத்தில் தான். சமூகத்தில் பெண்கள் பலதுறைகளில் முன்னேறி விட்டார்கள். என்றுமே அவர்களுக்கு தான் முதலிடம். எப்போதும் பல தடைகள் இருந்தாலும் அதை எல்லாம் எதிர்க்கவும் தாண்டி வரவும் கற்று விட்டோம். அதனால் மலர்விழி மேடம் பெரிய இடத்திற்கு செல்வார். படத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவும் நிச்சயம் தேவை”.
நடிகை புஜிதா, ” சிக்னல் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். எனக்கு வாய்ப்பு கொடுத்த மலர் மேமுக்கு நன்றி. மிகவும் திறமையான, பாசிட்டிவான கோ-ஸ்டார் சந்தோஷ். பவ்யாவுடன் காம்பினேஷன் இல்லை. ஆனால், அவரை எனக்கு முன்பே தெரியும். இமான் சாரின் இசை மேஜிக். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
இசையமைப்பாளர் டி. இமான், “இந்தப் படத்தின் கதை என்பதை தாண்டி பெண் இயக்குனருடன் எனது பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த படத்திற்கு இசையமைத்தேன். கல்வியாளர் இயக்குநராக சினிமாவுக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். சந்தோஷ பிரதாப் நிச்சயம் பெரிய இடத்திற்கு செல்வார். ஹீரோயின்ஸ் அழகாக நடித்திருக்கிறார்கள். படத்திற்கு சப்போர்ட் செய்ய வந்துள்ள விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.”