HomeGeneral‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

Published on

பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘மரகத நாணயம்’ வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் இணைந்திருக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய வெற்றி திரைப்படங்கள் வெளியாகி ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில், ‘மரகத நாணயம்’ திரைப்படமும் ஒன்று. படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆக இருக்கும் நிலையில், ’மரகத நாணயம்2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. தற்போது, இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிளாக்பஸ்டர் வெற்றிப் பெற்றது.  தனது கதாபாத்திர தேர்வின் மூலம் பல மொழிகளில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஆதிக்கும், இப்படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே, ரசிகர்களும் திரையுலக வட்டாரமும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன், இந்த இரண்டாம் பாகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றியுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுதன் சுந்தரம், மணிஷ் சிங்கால், துர்காராம் செளத்ரி, தேவ் மற்றும் கே.வி. துரை ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஆதி, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Latest articles

டோண்ட் டிரபிள் தி டிரபிள்

ஆம்புலன்ஸ் டிரைவர் சூரிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டு வர 25 லட்சம் தேவை. அந்த தேவையை தன்னுடன் தொடர்பிலிருக்கிற...

1000 பேருக்கு ‘அரிசி தானம்’ வழங்கி தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய டி ராஜேந்தர்!

திரைக்கலைஞர் டி.ராஜேந்தர் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு 'அரிசி தானம்' வழங்கினார். நிகழ்வு அகில இந்திய டி.ராஜேந்தர்...

‘டோரதி என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்! -நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் ‘மகாநதி’ திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. அந்த வரிசையில், அவர்...

‘சிக்மா’ தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளத! -நடிகர் ஷிவ் பண்டிட்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பு என ’லீலை’ திரைப்படத்தின் கதாநாயகனாக அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ஷிவ் பண்டிட்....

More like this