HomeGeneralவைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள 'மாறுவேஷம்'...

வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

Published on

மர்மம் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி ஜானர் கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சஸ்பென்ஸ், பரபரப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இந்த கதைக்களங்கள் கவர்கின்றன. இந்த வரிசையில், மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லரான ‘மாறுவேஷம்’ திரைப்படமும் இணைந்துள்ளது. ஒனிரோமான்சி பிக்சர்ஸ் பேனரின் கீழ், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று (ஜூலை 14, 2026) வெளியிட்டுள்ளது.
விறுவிறுப்பான திருப்பங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் பரபரப்பான தருணங்கள் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய துப்பறியும் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சவால் நிறைந்த வழக்குகளை தீர்ப்பதில் ஆர்வம் கொண்ட காவல்துறை அதிகாரியான திலக் என்ற கதாபாத்திரத்தில் வைபவ் நடித்துள்ளார். ஆனால், அவரது திறமைக்கு சவால் விடும் வகையிலான வழக்குகள் எதுவும் தனக்குக் கிடைக்காதது அவருக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. அப்படியான தருணத்தில் அவரது எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்ட பல திருப்பங்கள், ரகசியங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை கொண்ட ஒரு வழக்கு அவருக்கு வருகிறது. அந்த வழக்கின் பயணம்தான் ‘மாறுவேஷம்’ திரைப்படம்.
வியானா கதாநாயகியாக நடிக்கிறார். ராம்கி, முனிஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், ஜார்ஜ் விஜய், இந்துமதி, மு. ராமசாமி மற்றும் செல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீனி பகிர்ந்து கொண்டதாவது, “எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மர்மங்கள் நிறைந்த ‘மாறுவேஷம்’ என்ற இந்தப் படத்தின் தலைப்பே ரசிகர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய ஒன்று. யார் எதை மறைக்கிறார்கள், ஏன் ஒரு கதாபாத்திரம் மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது, அது வெறும் வெளிப்புற மாற்றமா அல்லது ஆழமான உணர்வுப்பூர்வமான பயணமா, பழிவாங்கலா, உயிர் பிழைப்பதற்கான போராட்டமா, காதலா அல்லது மறக்கப்பட்ட கடந்த காலத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியா என இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் படத்தில் சுவாரஸ்யமாக இருக்கும். கதாபாத்திரங்களின் இரட்டை முகங்கள், வெளிப்படும் ரகசியங்கள் மற்றும் இரண்டு அடையாளங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் சவால்தான் இப்படத்தின் மையம். முகம் மாறலாம். ஆனால், ஒருவரால் தனது கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியுமா?” என்றார்.
நடிகர்கள்:

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...