HomeCinemaபயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான 'M G 24' பிப்ரவரி 20-ம்...

பயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான ‘M G 24’ பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

Published on

அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக் இயக்கியுள்ள ‘M G 24’ படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான பிரணவ் மோகனன், ஸ்ட்ரைக்கர் படத்தில் நடித்த ஜஸ்டின் விஜய்.ஆர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.

சினிமா உதவி இயக்குனர்களின் கதையாக, சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் மயிலாஞ்சி படத்தில் நடித்த சுவேதா நட்ராஜ் மற்றும் தனலட்சுமி. எம் இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

விசாரணை படத்தின் மூலக் கதை எழுத்தாளர் ஆட்டோ சந்திரன், மலையாள நடிகர் அப்துல் பஷில் ஆகியோர் வில்லன்களாக நடிக்க இவர்களுடன் பிம்மிசிவா, அர்ஜுன் கார்த்திக், பிரபாகரன் நாகராஜன், யுவராஜ்.எஸ், காளியப்பன், சுரேஷ் பாலஜி, பார்பர் பாலு, ஜெயஸ்ரீ ஸ்ரீதரன், சீனு, ரவி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள பயர் கார்த்திக் ஜிவி பிரகாஷ் நடித்து சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் படத்தில் அனைவரையும் மிரட்டிய மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர்.

படம் பற்றி அவரிடம் கேட்டபோது, ”சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக இதை உருவாக்கியுள்ளோம். உதவி இயக்குநராக இருக்கும் கதையின் நாயகனும்,அவன் நண்பர்களும் சென்னையில் இருந்து பாலக்காட்டில் இருக்கும் ஒரு வீட்டை வாங்குவதற்காக, அதன் மதிப்பை சரி பார்க்க நேரில் செல்கின்றனர். அங்கே எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்க அதிலிருந்து எப்படி தப்பித்தார்களா, அவர்களுக்கும், அந்த வீட்டில் இருந்தவர்களும் என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை.

பாலக்காட்டில் உள்ள ஒரு வீடு மகிழ் கோமான் என்ற பழைய ஜமீனுடையது அந்த வீட்டின் நம்பர் 24. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த வீட்டில் நடப்பதால் ஜமீனுடைய பெயரையும் வீட்டின் எண்ணையும் இணைத்து இந்த படத்திற்கு M G 24 என்று பெயர் வைத்துள்ளோம்” என்றார்.

படப்பிடிப்பு சென்னை,பாலக்காடு, கோவை ஆகிய இடங்களில் நடைபெற்றது. படம் வரும் பிப்ரவரி மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

பி பாலாஜி & நவீன்குமார் இருவரும் ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் உதவியாளராக பணியாற்றிய சதாசிவ ஜெயராமன் இந்த படத்திற்கு இசையமைக்க, பிரியன், பித்தன் வெங்கட்ராஜ், பூவிழி மூவரும் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். பிரபல கலை இயக்குனர் வி கே நட்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பாலுமகேந்திரா பட்டறையின் மாணவர் நவீன்குமார் எடிட்டிங் செய்துள்ளார். வி.தனசேரன் கதை விவாதம் மற்றும் சிஜி பணிகளை மேற்கொண்டுள்ளார். அருண்கார்த்திக் நடனம் அமைக்க, பிரவீன், ரஞ்சித் இருவரும் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

 

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...